பி.எம்.இந்தியா
பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் 2015க்கு பிந்தைய வளர்ச்சிக்கான திட்டத்தை ஏற்றுக் கொள்வது தொடர்பான ஐக்கிய நாடுகள் அவையின் கூட்டத்தில் உரையாற்றினார்.
நிதி உள்ளீடு, தனி நபர் தொழில் வளர்ச்சி, மறுசுழற்சி எரிசக்தி ஆகியவை உள்ளிட்ட வளர்ச்சிக்கான இந்திய அரசின் திட்டங்கள் குறித்து பிரதமர் எடுத்துரைத்தார். தட்பவெட்ப மாறுதல் குறித்த அரசின் கொள்கை, ஏழைகளை இயற்கை பேரழிவிலிருந்து காப்பாற்ற வழிவகை செய்கிறது என்றார்.
பிரதமர் அவர்கள் உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம் அவர்களை சந்தித்தபோது அவர், பிரமரின் தூய்மையான இந்தியா திட்டத்தை பாராட்டியதோடு, இந்திய பிரதமரின் சிறந்த தலைமையால், உலகம் இந்தியாவை பார்க்கும் பார்வையே நல்ல வகையில் மாறியுள்ளது என்றார். இந்திய பிரதமர், கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டம், மறுசுழற்சி எரிசக்தி மற்றும் கழிப்பிடங்கள் கட்டுவதில், இந்திய அரசு தீர்மானமாக உள்ளது என்பதை தெரிவித்தார். உலக வங்கியின் அமைப்பு முறை விவாதத்துக்குள்ளானபோது, பிரதமர் அவர்கள், உலக வங்கியின் நிர்வாகத்தில் இந்தியாவுக்கு உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்திய பிரதமர் அவர்கள், ஐக்கிய நாடுகள் அவை செயலர் பான் கி மூன் அவர்களை சந்தித்தார். ஐக்கிய நாடுகள் அவையின் அமைதி ஏற்படுத்தும் செயல்பாடுகள், மற்றும் பாதுகாப்புக் குழு பற்றி விவாதிக்கப்பட்டது. தட்பவெட்ப மாற்றம் குறித்து விவாதிக்கையில், இவ்விவகாரத்தில் வளர்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் இடையே ஒரு நம்பிக்கை குறைபாடு உள்ளது என்று குறிப்பிட்டார். கழிவுகளை வெளியேற்றுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான இலக்குகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார் பிரதமர்.
ஜோர்டானின் ஹஷ்மைட் அரசின் அரசர் கிங் அப்துல்லா 2 அல் ஹுசைனை சந்தித்தார் பிரதமர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு உலகிற்கு ஏற்படுத்தும் ஆபத்து குறித்தும் தீவிரவாதம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தீவிரவாதத்திற்கு எதிராக ஒரு உலகலாவிய நடவடிக்கை அவசியம் என்று வலியுறுத்தினார் பிரதமர்.
எகிப்து அதிபர் அப்டேல் ஃபத்தா எல் சிஸி அவர்களை பிரதமர் சந்தித்து, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்தும், பிரிவினைவாத எதிர்ப்பு குறித்தும் விவாதித்தார் பிரதமர்.
செயின்ட் லூசியா நாட்டின் பிரதமர் திரு.கென்னி டேவிஸ் அந்தோணி அவர்களையும் பிரதமர் சந்தித்தர்.
My speech at the @UN. http://t.co/ltNznpXEIS #UNGA
— Narendra Modi (@narendramodi) September 25, 2015
Just before my speech at the @UN had a meeting with @UN @secgen Mr. Ban Ki-moon. pic.twitter.com/fPP8dnAFUK
— Narendra Modi (@narendramodi) September 25, 2015
Discussed India-Jordan cooperation in the meeting with HM King Abdullah II. pic.twitter.com/KHTuOZO7QA
— Narendra Modi (@narendramodi) September 25, 2015