Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்திய அரசின் செயலர்களுடன் பிரதமர் அதிகாரபூர்வமற்ற சந்திப்பு

மத்திய அரசின் செயலர்களுடன் பிரதமர் அதிகாரபூர்வமற்ற சந்திப்பு


மத்திய அரசின் பல்வேறு அமைச்சகத்தின் செயலர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அதிகாரபூர்வமற்ற வகையில் சந்தித்தார்.

கடந்த காலங்களில் இருந்த நிர்வாக நடைமுறையை தாண்டி எழ வேண்டும் என்று கூறிய பிரதமர், ஆறில் ஒரு பங்கு மனிதர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு செயலர்களுக்கு வாய்ப்பு உள்ளது என்றார். 2022 –ம் ஆண்டு அதாவது 75-வது சுதந்திர தினம் கொண்டாப்படும் தருணத்தில் தாங்கள் அடைய வேண்டிய இலக்குகளை கண்டறிய வேண்டும் என்றார்.

செயலர்கள் தங்களின் அமைச்சகத்தை மீறி, நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்த அரசும் ஒன்றாக இணைந்து பணிபுரிந்ததால் நிதிசார் உள்ளடக்கம் (மக்கள் நிதி திட்டம்) மற்றும் அனைவருக்குமான தடுப்பூசி திட்டம் (இந்திரதனுஷ் இயக்கம்) போன்ற திட்டங்கள் சிறந்த முடிவுகளை தந்துள்ளன என்று பிரதமர் கூறினார். நிறுவனங்கள் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தூய்மையான இந்தியா இயக்கம் குறித்து தேசியப் பிரதமர், இதற்கான மிகப்பெரிய ஆதரவு மக்களிடமிருந்தே வந்த்து. என்றார். இதுவே நிர்வாக அளவில் பெரிய மாற்றத்தை உண்டாக்கி உள்ளது என்றார்.

ஜூலை முதல் தேதி அமலாக்கம் செய்யப்படவுள்ள சரக்கு மற்றும் சேவை வரி நாட்டின் வரலாற்றில் மாற்றத்தை உண்டாக்க உள்ளது. இது கொண்டுவரவுள்ள மாற்றத்திற்கு செயலர்கள் முன் கூட்டியே தங்களைத் தயார் செய்து கொண்டு, தடையற்ற மாற்றத்தை உறுதி செய்ய வேண்டும்.

உலகம் முழுவதும் இந்தியாவை இன்று வேறுவிதமாகப் பார்க்கிறது. இந்த வாய்ப்பை நாம் தவற விடக்கூடாது. சர்வதேச எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்றும் வகையில் நமது கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் செயலர்களிடம் கேட்டுக் கொண்டார்.

இந்தியாவில் பின்னடைந்த நிலையில் உள்ள 100 மாவட்டங்களின் வளர்ச்சிக்காக லட்சியத்துடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். இந்த மாவட்டங்களுக்கு ஏற்ப குறுகிய காலத்தில் நிறைவேற்ற இலக்குகளை அமைத்து அதற்கேற்ப பணிபுரிய வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

மத்திய அமைச்சர்கள் திரு ராஜ்நாத் சிங், திரு அருண் ஜேட்லி, திருமதி. சுஷ்மா சுவராஜ், திரு நித்தின் கட்கரி ஆகியோர் செயலர்களிடம் உரையாற்றினர்.

முன்பு, அரசின் பல்வேறு துறைகளில் சில மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான பரிந்துரைகளைச் செயலர்கள் வழங்கினர்.