பி.எம்.இந்தியா
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியையும் (DA), ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணத்தையும் (DR) கூடுதலாக ஒரு சதவீதம் விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது 1.7.2017 முதல் அமல்படுத்தப்படும்.
விலைவாசி உயர்வை ஈடுகட்டுவதற்காக, அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத் தொகையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள 4 சதவீதத்துடன் கூடுதலாக ஒரு சதவீதம் வழங்கப்படுகிறது. 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஏற்றுக் கொள்ளப்பட்ட வழிமுறைகளுக்கு ஏற்ப, இந்த உயர்வு அளிக்கப்படுகிறது.
கூடுதலாக வழங்கப்படும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் சேர்த்து அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3,068.26 கோடி கூடுதல் செலவு பிடிக்கும். மேலும், 2017-18-ம் நிதியாண்டில் ரூ.2,045.50 கோடி செலவு ஏற்படும் (ஜூலை 2017 முதல் பிப்ரவரி 2018 வரையான 8 மாத காலத்துக்கு). இதன்மூலம், 49.26 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 61.17 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.
*****