Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2022 முதல் 3% அகவிலைப்படி உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த உயர்வு ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும்.

7-வது மத்திய ஊதியக்குழு பரிந்துரைகள் அடிப்படையில் இந்த உயர்வு வழங்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.9,544.50 கோடி செலவாகும். இதன் மூலம் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.

——