Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்திய கம்பெனி நிர்வாகத் துறை அமைச்சகம், இந்திய தொழில் போட்டிகள் ஆணையம், மற்றும் இந்திய கம்பெனி விவகாரங்கள் அமைப்பு மற்றும் வெளிநாடுகள் / வெளிநாட்டு நிறுவனங்களோடு ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஏற்பு.


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, மத்திய கம்பெனி நிர்வாகத் துறை அமைச்சகம், இந்திய தொழில் போட்டிகள் ஆணையம், மற்றும் இந்திய கம்பெனி விவகாரங்கள் அமைப்பு மற்றும் வெளிநாடுகள் / வெளிநாட்டு நிறுவனங்களோடு ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு ஏற்பளித்தது.

கீழ்க்கண்ட அமைப்புகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

1) மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் நெதர்லாந்து நாட்டின் பொருளாதார விவகாரங்கள் அமைச்சகம்

2) இந்திய தொழில் போட்டிகள் ஆணையம் மற்றும் ரஷ்யாவின் ஏகபோக எதிர்ப்பு சேவைகள் அமைப்பு

3) இந்திய தொழில் போட்டிகள் ஆணையம் மற்றும் ஆஸ்திரேலிய போட்டிகள் மற்றும் நுகர்வோர் ஆணையம்

4) இந்திய தொழில் போட்டிகள் ஆணையம் மற்றும் ஐரோப்பிய ஆணையம்

5) இந்திய தொழில் போட்டிகள் ஆணையம் மற்றும் போட்டிகள் ஆணையம், கனடா

6) இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் நிலையம் மற்றும் அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம்.

7) இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் நிலையம் மற்றும் இங்கிலாந்து இயக்குநர்கள் நிலையம்

8) இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் நிலையம் மற்றும் சர்வதேச நிதி கழகம்

கையெழுத்தான இந்த ஒப்பந்தங்கள் சம்பந்தப்பட்ட நாடுகள் / நிலையங்கள் இடையே, அறிவு பகிர்வு, தொழில்நுட்ப பகிர்வு, அனுபவ பகிர்வு, அமலாக்கப் பகிர்வு ஆகியவற்றுக்கு வகை செய்யும். கார்ப்பரேட் நிர்வாகம், கார்ப்பரேட் சமூக பொறுப்பு, மற்றும் கணக்காளர் பணிகள், மற்றும் சிறந்த தொழில் நடைமுறைகள் ஆகியவற்றில் இந்த அறிவுப் பகிர்வு நடைபெறும்.

கார்ப்பரேட் நிர்வாகம் மற்றும் கார்ப்பரேட் சமூக பொறுப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட இரு தரப்புக் குழு இந்த ஒப்பந்தங்கள் செயலாற்றப் படுவதை கண்காணிக்கும்.