Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து


மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) அனைத்து பணியாளர்களுக்கும் அந்தப் படையின் நிறுவன தினமான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உறுதிப்பாடு, ஒழுக்கம், அர்ப்பணிப்புக்கு பெயர் பெற்ற சிஐஎஸ்எஃப், நாடு முழுவதும் முக்கியமான உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று அவர் கூறியுள்ளார். கடமையில் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இந்தியாவின் பாதுகாப்புக்கும் முன்னேற்றத்திற்கும் பெரிதும் பங்களிக்கிறது என்று திரு நரேந்தி்ர மோடி கூறியுள்ளார்.

 

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தின் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

“மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் அனைத்து பணியாளர்களுக்கும் அந்தப் படையின் நிறுவன தினத்தை முன்னிட்டு அன்பான வாழ்த்துகள்.

 

அர்ப்பணிப்பு, ஒழுக்கம், உறுதிப்பாட்டிற்கு பெயர் பெற்ற சிஐஎஸ்எஃப், நாடு முழுவதும் உள்ள முக்கியமான உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடமையில் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இந்தியாவின் பாதுகாப்புக்கும் முன்னேற்றத்திற்கும் பெரிதும் உதவுகிறது.”

(Release ID : 2237307)

****

TV/PLM/SH