Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மரியாதைமிகு ரெவ். டாக்டர் பிலிபோஸ் மார் கிறிசோஸ்டம் மார் தோமா வலிய மெட்ரோபாலிட்டன் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


மரியாதைமிகு ரெவ். டாக்டர் பிலிபோஸ் மார் கிறிசோஸ்டம் மார் தோமா வலிய மெட்ரோபாலிட்டன் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், “மரியாதைமிகு ரெவ். டாக்டர் பிலிபோஸ் மார் கிறிசோஸ்டம் மார் தோமா வலிய மெட்ரோபாலிட்டன் மறைந்ததை அறிந்து துயருற்றேன். அவர், தனது இறையியல் அறிவுக்காகவும், சகமனிதர்களின் துன்பத்தை நீக்குவதற்காக மேற்கொண்ட அரும்பணிகளுக்காகவும் என்றும் நினைவு கூரப்படுவார். மலங்கரா மார் தோமா சிரியன் தேவாலயத்தின் உறுப்பினர்களுக்கு எனது இரங்கல்கள்” என்று தெரிவித்துள்ளார்.

 

*****