Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் லேன்ஸ் நாயக் அனுமந்தப்பாவை பிரதமர் சென்று உடல் நலம் விசாரித்தார்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் லேன்ஸ் நாயக் அனுமந்தப்பாவை பிரதமர் சென்று உடல் நலம் விசாரித்தார்


சமீபத்திய சியாச்சின் பனிச்சரிவில் உயிர் பிழைத்த ராணுவ வீரர் லேன்ஸ் நாயக் அனுமந்தப்பாவை அவர் அனுமதிக்கப்பட்டுள்ள இராணுவ மருத்துவமனைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். முன்னதாக இந்த ராணுவ வீரர் பனிப்பாறை பகுதியில் இருந்து மீட்கப்பட்டு விமானம் மூலம் புதுதில்லியில் உள்ள ராணுவ ஆர்.ஆர் மருத்துவமனைக்கு கொண்டுவர பட்டார்.

லேன்ஸ் நாயக் அனுமந்தப்பாவின் உடல் நிலை குறித்து பிரதமருக்கு எடுத்துரைக்கப்பட்டது. பிரதமர் 10 நிமிட நேரம் அந்த வீரருடன் செலவிட்டார். லேன்ஸ் நாயக் அனுமந்தப்பாவுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர் குழுவை பிரதமர் சந்தித்து அவருக்கு அளிக்கும் சிகிச்சையில் எந்த குறையும் இருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

லேன்ஸ் நாயக் அனுமந்தப்பாவின் தாங்கும் திறனையும் தீர உணர்வையும் எந்த வார்த்தைகளாலும் வர்ணிக்க முடியாது என்று குறிப்பிட்ட பிரதமர் அவர் தலை சிறந்த வீரர் என்று கூறினார்.

ராணுவ தளபதி ஜெனரல் தல்பீர் சிங்கும் அப்போது உடன் இருந்தார்