பி.எம்.இந்தியா
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மலேசியாவில் யூரியா மற்றும் அமோனியா உற்பத்தி ஆலையை அமைப்பதற்கு செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் உற்பத்தியாகும் யூரியா இந்தியாவுக்கே கொண்டுவரப்படும் மற்றும்/அல்லது மலேசியாவில் ஏற்கனவே கூடுதலாக உள்ள யூரியா இந்தியாவுக்கு கொண்டுவரப்படும்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த 2.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலை, ஆண்டுதோறும் 24 லட்சம் டன் யூரியாவையும், 13.5 லட்சம் டன் அமோனியாவையும் உற்பத்தி செய்யும் திறனுடன் இருக்கும். இங்கு மேற்கொள்ளப்படும் உற்பத்தி முழுவதும், இந்திய சந்தைக்கே விநியோகிக்கப்படும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், நாட்டின் யூரியா மற்றும் அமோனியா தேவையை பூர்த்திசெய்யும் வகையில், தொடர்ந்து விநியோகிப்பது உறுதிசெய்யப்படும். இருதரப்பும் ஒப்புக் கொண்டால், குறைந்த விலையில் கிடைக்கும்.
****