பி.எம்.இந்தியா
மலேசியாவுடன் திருத்தப்பட்ட விமான சேவைகள் ஒப்பந்தம் (ஏ.எஸ்.ஏ) செய்வதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.
திருத்தப்பட்ட ஏ.எஸ்.ஏ -வுக்கு 2011-ல் முதல்குறி இடப்பட்டது. இருந்தபோதிலும், சட்டப் பிரிவு 13 ல் சில மாறுபாடுகள் இருந்த காரணத்தால், அதாவது வருமானத்தை செலுத்துவது தொடர்பாக மாறுபாடுகள் இருந்த காரணத்தால், ஒப்பந்தம் கையெழுத்திட முடியாமல் போனது. ICAN 2016-ல் நடைபெற்ற சந்திப்பின்போது, இந்திய அரசின் நிதி அமைச்சகம் கூறிய ஆலோசனையின்படி மேற்படி சட்டப்பிரிவை திருத்தம் செய்வதற்கு மலேசிய தரப்பு ஒப்புக் கொண்டது.
விமான சேவைகள் ஒப்பந்தத்தின் சிறப்பம்சங்கள்
• இப்போதைய ஏ.எஸ்.ஏ 1974-ல் கையெழுத்திடப்பட்டது. எனவே ஏ.எஸ்.ஏ-வை திருத்தம் செய்து, மேம்படுத்தி நவீனப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
• இப்போதுள்ள ஏ.எஸ்.ஏ -வின் அம்சங்கள் சமீபத்திய ICAO வரையறையின்படி புதிய அம்சங்கள் மூலமாக மாற்றப்படும்.
• 3வது நாட்டு விமான நிறுவனத்தின் கூட்டுறவு மார்க்கெட்டிங் ஒப்பந்தம் சேர்க்கப் பட்டுள்ளது.
• உள்நாட்டு விதிமுறை பகிர்தலுக்கான பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது
• பாதுகாப்பு மற்றும் உத்தரவாதம் குறித்த சட்டப்பிரிவுகள், திருத்தப்பட்ட ஏ.எஸ்.ஏ-ல் சேர்க்கப் பட்டுள்ளன.
• பயணமுறை மாற்ற சேவைகள் குறித்த சட்டப் பிரிவு திருத்தப்பட்ட ஏ.எஸ்.ஏ-வில் சேர்க்கப் பட்டுள்ளது. மற்ற தரப்பாரின் எல்லையில் எந்த இடத்தில் இருந்தும் விமான பயணியும் சரக்கும் எந்தவொரு பயணமுறை மாற்ற போக்குவரத்தின் மூலமும் செல்வதற்கு இது அனுமதி அளிக்கும்.