பி.எம்.இந்தியா
மேதகு பிரதமர் தத்தோ திரு நஜீப் துன் ரஜாக் அவர்களே,
பத்திரிக்கையாளர்களே,
உங்களின் அன்பான வரவேற்பிற்கும், விருந்தோம்பலுக்கும் நன்றி திரு பிரதமர் அவர்களே.
இந்த ஆசியான் மற்றும் கிழக்காசிய மாநாடுகளுக்கு இடையே என்னை வரவேற்றதிற்கு உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசியான் சமூகம் அமைக்கப்பட்டதற்கும், சிறந்த மாநாடுகளுக்காகவும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். EAS அமைப்பின் பத்தாவது ஆண்டில் அதை நீங்கள் ஆய்வு செய்தது, தற்போது இந்தப் பிராந்தியத்தின் மிக முக்கியமான மாநாட்டுக்கு பெரும் வகையில் உதவி செய்தது.
அடுத்தடுத்த இரண்டு விமான விபத்துகள், எந்த தேசத்தையும் கலங்கச் செய்யும். ஆனால், உங்களின் தலைமையாலும், உங்கள் மக்களின் வலிமையாலும் அதை நீங்கள் சமாளித்தீர்கள்.
பிரதமர் அவர்களே, மலேசியாவுடனான எங்கள் உறவை நாங்கள் எப்படி மதிக்கிறோம் என்பதை உங்களுக்கு கூறுகிறேன். உங்களின் அற்புதமான தலைமையால், இந்த உறவு மென்மேலும் சிறந்த பாதையில் பயணிக்கிறது.
நமது பிணைந்த வரலாறுகளுக்கு பல கோணங்கள் உண்டு. நமது கலாச்சாரத்துக்கும் மதத்துக்கும் பழைய பிணைப்புகள் உண்டு. மலேசிய இந்திய சமூகம் நம் இரு நாடுகளுக்கிடையே ஒரு வலுவான உறவை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை அவர்களிடையே பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
நமது பன்முகத்தன்மையாலும், நமது ஜனநாயகத்தாலும் நாம் அடையாளப்படுத்தப் படுகிறோம். ஒரு வலுவான பொருளாதாரக் கூட்டணியை உருவாக்கியிருக்கிறோம். ஒரே கடற்பாதையில் நாம் அமைந்திருக்கிறோம்.
இந்தப் பிராந்தியம் குறித்த நமது பார்வையும், அணுகுமுறையும் ஒரே மாதிரி இருக்கிறது. மேலும் நாம் பிராந்திய அமைப்புகளில் இணைந்து செயல்படுகிறோம். இந்த செழுமை மிக்க உறவால், நாம் நமது இரு தரப்புக் கூட்டங்களையும், மாநாடுகளையும், அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தைகளையும் அடிக்கடி நடத்த முடிவெடுத்துள்ளோம்.
நமது உறவை மேம்படுத்த நாம் மேலும் உத்வேகத்தோடு செயல்படுவோம் என்பதை உறுதி கூறுகிறேன். பாதுகாப்பு தொடர்பான உங்கள் ஒத்துழைப்புக்கு எனது நன்றி. பாதுகாப்பு சவால்களை நாம் இணைந்து எதிர்கொள்ள இது உதவுகிறது. இத்துறையில் நமது கூட்டுறவை மேலும் மேம்படுத்துவோம்.
பல்வேறு நாடுகளில் நிகழ்ந்துள்ள தீவிரவாதத் தாக்குதல்கள், மற்றும் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள், உலகம் எதிர்கொள்ளும் பாதுகாப்பு தொடர்பான சவால்களை நினைவூட்டுகிறது.
பிரதமர் அவர்களே, தீவிரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் எதிர்த்து தீவிரவாதத்துக்கும் மதத்துக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை புறந்தள்ளி இஸ்லாமின் உண்மையான மதிப்பீடுகளை எடுத்துக் காட்ட நீங்கள் தலைமையேற்றுள்ளீர்கள். தீவிரவாதம் விடும் சவால்களுக்கு எதிரான முக்கியமான நடவடிக்கை இது.
நாம் பாதுகாப்பு தொடர்பான நமது கூட்டுறவை மேம்படுத்தி, கடற்பாதுகாப்பை அதிகப்படுத்தி, இப்பிராந்தியத்தில் பேரிடர் மேலாண்மையை மேம்படுத்த வேண்டும். நாம் நமது கூட்டு பயிற்சிகளை மேம்படுத்தவும், SU 30 அமைப்பை ஏற்படுத்தவும் ஒப்புக் கொண்டுள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இணையப் பாதுகாப்பில் நமது கூட்டுறவு முக்கியமானது. நமது வாழ்க்கை இணையத்தால் இணைக்கப்பட்டு வருவதால், நமது காலத்தில் இது மிக முக்கிய கவலையாக இருந்து வருகிறது.
நமது வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் மேலும் மேம்படுத்தப் படும் என்ற பிரதமரின் நம்பிக்கையை நானும் பகிர்ந்து கொள்கிறேன். நமது பரஸ்பர ஒப்பந்தங்களையும், இந்திய ஆசியான் ஒப்பந்தங்களையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். பிராந்திய பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தம் விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கிறேன்.
உட்கட்டமைப்பில் மலேசியாவின் திறமை அனைவரும் அறிந்ததே. இந்தியாவில் சாலைப் போக்குவரத்து உட்பட மலேசியா பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. உட்கட்டமைப்பு விரிவாக்கம், மேக் இன் இந்தியா மற்றும் நவீன நகரங்கள் அமைப்பதில் மலேசியாவின் கூடுதலான பங்கை எதிர்ப்பார்க்கிறேன்.
மலேசியாவில் இந்திய நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இந்திய நிறுவனமான IRCON மலேசியாவில் ரயில் உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மலேசிய பொருளாதாரத்தில் இந்திய பங்கை அதிகப்படுத்த விரும்புகிறேன்.
நானும் பிரதமரும், விரைவான முடிவுகளை எட்டுவதில் உறுதியாக உள்ளோம். மலேசியாவின் தலைமை செயல் அலுவலர்களை இன்று சந்திக்க உள்ளேன். பொது நிர்வாகத்திலும், அரசு நிர்வாகத்திலும் நமது கூட்டுறவு மேம்பட்டு வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. PEMANDU அமைப்போடு நான் நேரடியாக உரையாடியிருக்கிறேன். நித்தி ஆயோக் அவர்களோடு சேர்ந்து பணியாற்றும் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. கலாச்சார மற்றும் மக்கள் உறவுகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிப்போம்.
பிரிக்ஸ்பீல்டில் உள்ள லிட்டில் இந்தியாவில் டோரானா நுழைவாயிலை நானும் பிரதமர் நஜீபும் திறக்க உள்ளோம். இது இந்தியாவின் பரிசு. இது பிரதமருக்கு இந்திய உழைப்பாளிகளின் பரிசு. இது நமது காலங்கடந்த நெருங்கிய உறவின் அடையாளமாக இருக்கும்.
மலேசிய மாணவர்களை இந்தியாவில் படிக்க வருமாறு அழைக்கும் அதே நேரத்தில், இரு நாட்டு பட்டங்களை அங்கீகரிக்கும் ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திட வலியுறுத்துகிறேன்.
எங்கள் பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேதா மற்றும் சித்தாவில் வளர்ந்து வரும் கூட்டுறவு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
பிரதமர் அவர்களே, ஒரு ஆரோக்கியமான விவாதத்துக்கு நன்றி. நமது உறவு அடுத்த கட்டத்தை எட்டும் என்று நம்புகிறேன். இந்தியாவுக்கு உங்களின் வருகையை வரவேற்கிறேன்.
நன்றி.
Appreciate your gesture of hosting me in the midst of the ASEAN and East Asia Summit: PM @narendramodi begins his remarks at the press meet
— PMO India (@PMOIndia) November 23, 2015
Commend the resolve and resilience of people of Malaysia. India's links with Malaysia are very old: PM https://t.co/w2eQhMtqCA
— PMO India (@PMOIndia) November 23, 2015
We will work with renewed vigour to raise momentum of our partnership. We will continue to deepen security cooperation: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 23, 2015
We will make defence cooperation stronger. Our agreements on cyber security are very important: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 23, 2015
Our trade and investment relations can be scaled up significantly. Malaysia's competence in infrastructure is well known: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 23, 2015
We will play special emphasis on cultural and people to people ties: PM @narendramodi at the press meet. https://t.co/w2eQhMtqCA
— PMO India (@PMOIndia) November 23, 2015
Our strategic partnership will go to a new level. Looking forward to welcome PM @NajibRazak to India: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 23, 2015
Discussed the many dimensions of India-Malaysia relations with PM @NajibRazak & spoke of ways to deepen ties. pic.twitter.com/WnemWfl7YI
— Narendra Modi (@narendramodi) November 23, 2015
Diversity & democracy connect India & Malaysia. We want to further expand cooperation in economy, trade & security. https://t.co/QAIvkPw8kV
— Narendra Modi (@narendramodi) November 23, 2015