Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மாநிலங்களவையின் கவனத்திற்காக காத்திருக்கும் 2015ஆம் ஆண்டிற்கான நிதிஒதுக்கீட்டுச் சட்டங்கள்(நீக்குதல்) மசோதா மற்றும் 2015ஆம் ஆண்டிற்கான நீக்குதல் மற்றும் திருத்துதல்(மூன்றாவது) மசோதா ஆகியவற்றுக்கான திருத்தங்கள்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை மாநிலங்கள் அவையின் கவனத்திற்காக காத்திருக்கும் 2015ஆம் ஆண்டின் நிதி ஒதுக்கீட்டுச் சட்டங்கள்(நீக்குதல்) மசோதா மற்றும் 2015ஆம் ஆண்டிற்கான நீக்குதல் மற்றும் திருத்துதல் (மூன்றாவது) மசோதா ஆகியவற்றுக்கான அதிகாரபூர்வமான திருத்தங்களுக்கு இன்று தனது ஒப்புதலை அளித்து, மாநிலங்கள் அவை இதை நடவடிக்கைக்கு எடுத்துக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியது.

இந்த மசோதாவின் மூலம் நீக்கப்படவுள்ள சட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் அதற்குரிய பொருளை இழந்த நிலையிலும் இன்னும் சட்ட நூல்களில் தொடர்கின்றன. அதற்குரிய காலம் ஏற்கனவே முடிந்து விட்ட இத்தகைய சட்டங்களை நீக்குவதென்பது எவ்வகையிலும் இந்த சட்டங்கள் தகுதியுடன் இருந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்மீது எவ்வகையிலும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதோடு, இந்தச் சட்டங்கள் இப்போது பொருத்தமற்றதாகவும், பயனற்றதாகவும் மாறிவிட்ட நிலையில், இத்தகைய சட்டங்களை நீக்குவதென்பது சட்ட நூல்களை தூய்மைப்படுத்தும் நோக்கத்திற்கு உதவி செய்யும் என்பதோடு, சட்ட நூல்களின் மீதான சுமையையும் குறைப்பதாக அமையும்.


******