Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மாநிலம் / யூனியன் பிரதேசங்களில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் மற்றும் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு அக்டோபர் 2015 முதல் மார்ச் 2016 வரை கூடுதல் உணவு மானியங்கள் ஒதுக்கீடு


தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 05.07.2013 அன்று அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகைக்கு உணவு தானியங்கள் அதிக பட்ச மானிய விலையில் வழங்கப்பட வேண்டும். கோதுமை கிலோ ரூ.2க்கும், அரிசி கிலோ ரூ.3க்கும் வழங்கப்படும். 2011இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கீட்டின்படி இந்தச் சட்டம் அமல்படுத்தப் படுகிறது. செப்டம்பர் 2015க்குள் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களிலும் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. பொது விநியோக முறை மூலம் பயனாளிகள் அதிகபட்ச மானிய விலையில் கோதுமையும், அரிசியும் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கேற்ப தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாத மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் செப்டம்பர் 2015 வரை மட்டுமே கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 20 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தி வருகிறது. மீதமுள்ள மாநிலங்கள் டி.டி.பி.எஸ். முறையை பின்பற்றி வருகிறது. இந்த மாநிலங்கள் அடுத்த சில மாதங்களில் இந்தச் சட்டத்தை அமலாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால் இச்சட்டத்தை இன்னும் அமல்படுத்தாத மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு அக்டோபர் 2015 முதல் மார்ச் 2016 வரை அல்லது சட்ட அமலாக்கம் வரை வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கும் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ள குடும்பங்களுக்னகும் மாதத்திற்கு வழங்கப்படும் கூடுதல் ஒதுக்கீட்டை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பழைய டி.டி.பி.எஸ். முறையை விட்டு விரைவாக தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*****