Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மாற்றுத் திறனாளிகள் உரிமைக்கான சட்டம் 2016 நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்


பிரதமர் மோடி மாற்றுத் திறனாளிகள் உரிமைக்கான சட்டம் 2016 நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதற்கு பாராட்டு தெரிவித்தார். இது ஒரு வரலாற்று பூர்வமான தருணம் என்றும், அணுகக்கூடிய இந்தியா இயக்கத்திற்கு இது மேலும் வலு சேர்க்கும் என்றும் தெரிவித்தார்.

”மாற்றுத் திறனாளிகள் உரிமைக்கான சட்டம் 2016 வெற்றிகரமாக தாக்கல் செய்யப்பட்டது வரலாற்று பூர்வமான தருணம். மேலும் அணுகக்கூடிய இந்தியா இயக்கத்திற்கு இது மேலும் வலு சேர்க்கும்.

இந்த சட்டத்தின் கீழ் உடல் ஊனங்களின் வகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, கூடுதல் ஆதாயங்களை சேர்ப்பதற்கான வழிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான குற்றங்களை இழைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு மேம்படுத்தப்பட்ட வாய்ப்பு, சம உரிமை மற்றும் அணுகக்கூடிய திறனும் கிடைக்கும். மேலும் தகவல்களுக்கு https://goo.gl/Zwpm4k என்ற சுட்டியைப் பார்க்கவும்,” என பிரதமர் தெரிவித்தார்.