Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மியான்மர் அதிபருடன் கூட்டாக பத்திரிக்கையாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில், பிரதமர் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கை (29 ஆகஸ்ட் 2016)

மியான்மர் அதிபருடன் கூட்டாக பத்திரிக்கையாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில், பிரதமர் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கை (29 ஆகஸ்ட் 2016)


மேதகு அதிபர் யூ ஹிடின் கியாவ் அவர்களே ஊடக உறுப்பினர்களே,

மேதகு அதிபர் யூ ஹிடின் க்யாவ் மற்றும் அவரது மதிப்புமிக்க குழுவினரையும் வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

மேதகு அதிபர் அவர்களே, நீங்கள் உங்களது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவை தேர்ந்தெடுத்தது, எங்களை மிகவும் கவுரவிப்பதாக உள்ளது.

நண்பர்களே,

மியான்மர் எங்களுக்கு சிறப்பான நாடாகும்.

இந்தியாவின் அண்டைநாடுகளில் அது முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

அது இந்தியா தென்கிழக்கு ஆசியாவுடன் தொடர்புக்கொள்ள நடைபாலமாக உள்ளது.

நமது சமூகங்களுக்கு இடையே நெடுங்காலமாக உள்ள கலாச்சார மற்றும் வரலாற்று தொடர்புகள் நமது உறவிற்கு உறுதியான அடித்தளத்தை அமைத்துள்ளது.

புத்தரின் கொள்கைகளான மெட்டா அல்லது அன்பு செலுத்துதல் மற்றும் சர்வ பந்த சம்பவா, அனைத்து மதங்களும் சமம் ஆகியவை நமது வாழ்க்கையின் வழியாக உள்ளது.

மேதகு அதிபர் அவர்களே,

உங்களின் சிறந்த தேசம் இப்போது புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளது.

உங்களது முதிர்ச்சியான தலைமை மற்றும் உங்களது மக்கள் ஜனநாயகத்தின் மீது கொண்டுள்ள ஈடுபாட்டை இந்த சகாப்தம் வெளிக் காட்டியுள்ளது.

மற்றும், இந்த பிராந்தியத்தில் மியான்மர் நிலையான மற்றும் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் நாடாக அமைய உங்களது தெளிவான பார்வை மற்றும் உறுதியான ஆர்வம் ஆகியவை துணையாக உள்ளது.

மியான்மரின் புதிய அரசு தனது கீழ்காணும் பயணத்தை துவங்கியுள்ளது::

• அதன் விவசாயத்தில் வளர்ச்சி;

• அதன் தொழில் மற்றும் உட்கட்டமைப்பில் வளர்ச்சி;

• அதன் கல்வியை வலுவாக்குதல் ;

• அதன் இளைஞர்களுக்கு திறனளித்தல் ;

• புதிய நிறுவனங்களை கட்டுதல் மற்றும் தற்போதுள்ளவற்றை வலுவாக்குதல்;

• பொருளாதார வளர்ச்சிற்கு உறுதியான பாதையை தேர்ந்தெடுத்தல் ; மற்றும் அனைத்திற்கும் மேலாக

• புதிய தேசத்தை உருவாக்கும் குறிக்கோளை எய்துதல்;

நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், இந்தியாவில் உள்ள 1.25 பில்லியன் மக்களும் உங்களுடன் – பங்குதாரர்களாக மற்றும் நண்பர்களாக – துணை நிற்பார்கள் என நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

நண்பர்களே,

ஜனாதிபதியும் நானும் இரு நாடுகளுக்கு இடையேயான பல்வேறு விவகாரங்கள் குறித்து பயனுள்ள பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளோம்.

நமது சமூக நலன் மிகவும் பிணைந்துள்ளதை நாங்கள் அங்கீகரித்துள்ளோம்.

மற்றும், நாங்கள் ஒருவருக்கொருவரின் முக்கிய நலன் மற்றும் பிரச்சினைகளில் விழிப்புடன் இருப்பதன் தேவையை ஏற்றுக் கொண்டுள்ளோம்.

இதன் முடிவாக, ஜனாதிபதியும், நானும், நமது மக்களின் பாதுகாப்பிற்காக இணைந்து செயல்பட ஒப்புக் கொண்டுள்ளோம்.

மற்றும், நமது பகுதியில் உள்ள தீவிரவாதம் மற்றும் உள்ளூர் தீவிரவாதம் போன்ற பொது சவாலான செயல்களை எதிர்கொள்வதில் கூட்டாக செயல்பட உள்ளோம்.

‘21ம் நூற்றாண்டின் பங்லாங் மாநாட்டின் கீழ் துவங்கப்பட்டுள்ள அமைதி நடைமுறைக்கு இந்தியாவின் முழு ஆதரவையும் நான் தெரிவித்தேன்.

நண்பர்களே,

இந்தியா-மியான்மர் நட்புணர்வு வெறும் நல்ல வார்த்தைகள் மற்றும் தூய்மையான எண்ணம் மட்டுமே என விவரிக்க இயலாது.

அதன் பரப்பு மற்றும் ஆழம் ஆகியவை “மக்கள் முதலில்” என்ற உறுதியான கொள்கையுடைய வலுவான கூட்டுறவின் பங்களிப்பு மூலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 2 பில்லியன் டாலர் வளர்ச்சிக்கான உதவி மியான்மரின் சாதாரண மனிதனின் வாழ்க்கையில் சென்றடையும் வகையில் உள்ளது.

இணைப்பு ஏற்படுத்துதல், உள்கட்டமைப்பு, திறன் வளர்ப்பு, கல்வி, உடல்நலம் மற்றும் பல இதர பிரிவுகளிலும் நாம் ஆதரவாக இருக்கிறோம்.
நமது கூட்டு பங்களிப்பிற்கு சில முக்கிய உதாரணங்களானவை:

• கலடன் திட்டம், அதன் துறைமுகம் மற்றும் நீர்வழிப் பாதை இவ்வாண்டு இறுதியில் நிறைவு பெறும் நிலையில் உள்ளது;

• இந்தியா-மியான்மர்-தாய்லாந்து மூன்று நாடுகளுக்கு இடையேயான நெடுஞ்சாலை;

• மியான்மர் தகவல் தொழில்நுட்ப நிலையம்;

• விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான உயரிய மையம்; மற்றும்

• உடல்நலம், கல்வி மற்றும் தொழிற்பயிற்சி பிரிவுகளில் சிறு திட்டங்கள்

இன்று கையெழுத்தான இரண்டு செயல்பாட்டு ஒப்பந்தங்கள் மூன்று நாடுகளுக்கு இடையேயான நெடுஞ்சாலைத் திட்டத்தில் 69 பாலங்கள் மற்றும் கலியா-யார்கி இடையேயான சாலை ஆகியவற்றை கட்டுதல் மற்றும் தரம் உயர்த்துதலுக்கு வழிவகுக்கும்.

விவசாயம், வங்கி, மின்சாரம் மற்றும் எரிசக்தியில் எங்களது கூட்டுறவினை மேலும் வலுப்படுத்த உள்ளோம்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பராம்பரிய மருத்துவ முறைகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அத்துறைகளில் எங்களது கூட்டுறவை செயல்படுத்தும்.

பருப்பு வணிகத்தில் இரு நாடுகளும் பயனடையும் வகையில் நீண்ட காலத் திட்டத்தை தயாரிக்க ஒப்புக் கொண்டுள்ளோம்.

இந்த ஆண்டு, ஏப்ரல் மாதம், நாங்க மியான்மரில் உள்ள தமுவிற்கு மின்வசதி வழங்கும் சிறிய பணியை மேற்கொண்டோம்.

நாங்கள் உங்களுக்கு வழங்கும் மின்சக்தியை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்க விரும்புவதை அதிபருக்கு நான் தெரிவித்தேன்.

மேதகு அதிபர் அவர்களே,

மியான்மருடன் வளர்ச்சிக்கான பங்களிப்பை உயர்த்த இந்தியா தயாராக உள்ளது.

மற்றும், மியான்மர் அரசின் முன்னுரிமைகள்படி அவற்றை நிறைவேற்றும்.

நண்பர்களே,

கலாச்சாரம் தான் நமது உறவிற்கு முக்கிய அடிப்படையாக உள்ளது.

மியான்மர், பாகனில் உள்ள ஆனந்தா கோவிலை புனரைமைத்தலில் நமது பங்களிப்பு குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

கடந்த வாரத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சேதமடைந்துள்ள பிற வரலாற்று நினைவிடங்கள் மற்றும் கோபுரங்களை, புனரமைக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

மேதகு அதிபர் அவர்களே,

உங்களின் வருகை சரியான தருணத்தில் அமைந்து உள்ளது.

மற்றும், நமது இன்றைய பேச்சுவார்த்தைகள் நமது கூட்டறவிற்கான வரைபடத்தையும், செயல் பொருளையும் தயாரிக்க உதவியுள்ளது.

நான் உங்களுடன் இணைந்து இந்த உறவினை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்ல எதிர்பார்த்துள்ளேன்.

ஒளிமயமான மியான்மர் உங்களது குறிக்கோள் மட்டுமல்ல.

எங்களது உணர்வும் கூட,

மீண்டும் மேதகு அதிபர் அவர்களின் இந்தியாவின் வருகைக்கு மனதார வரவேற்கிறேன்.

நன்றி.

மிக்க நன்றி.