பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே மீன்வளத்துறை தொடர்பான நடவடிக்கைகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டிருப்பது குறித்து விளக்கப்பட்டது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நட்புரீதியான உறவை வலுப்படுத்தி இருப்பதுடன், மீன்வளத்துறை, மீன் வளர்ப்பு மற்றும் அதுதொடர்பான நடவடிக்கைகளை பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகளின் மூலமாக ஒத்துழைப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்றும், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு முன் எழுத்துபூர்வமாக அறிவிக்க வேண்டும். இரு தரப்பும் பரஸ்பரம் ஒப்புக் கொண்டால் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேலும் நீட்டிக்கப்படலாம்.