Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முதலாம் உலகப் போரில் பங்கேற்று போரிட்ட இந்திய வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி


முதலாம் உலகப் போரில் பங்கேற்று போரிட்ட இந்திய வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

“கொடூரமான முதல் உலகப்போர் நிறைவடைந்து இன்றுடன் நூறு ஆண்டுகள் ஆகும் வேளையில், உலக அமைதியில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதுடன், போரால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் மற்றும் பேரழிவுகள் மீண்டும் நிகழாதவாறு, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ சூழலை மேம்படுத்தவும் உறுதியேற்போம்.

முதல் உலகப் போரில் பங்கு பெற்று போரிட்ட துணிச்சல்மிக்க வீரர்களை இந்தியா நினைவுகூறுகிறது. இந்தப் போரில் இந்தியா நேரடியாக பங்கேற்காவிட்டாலும், அமைதிக்காக இந்திய வீரர்கள் உலகெங்கிலும் இந்தப் போரில் பங்கு பெற்றனர்.

ஃபிரான்சில் உள்ள நியூவ் சேப்பல் நினைவிடத்திலும், முதல் உலகப் போரில் இந்தியா பங்கு பெற்ற இடமான இஸ்ரேலின் ஹைஃபாவில் உள்ள நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தும் வாய்ப்பை நான் பெற்றேன். இஸ்ரேல் பிரதமர் திரு. பெஞ்சமின் நெதன்யாஹூ இந்தியா வந்த போது, தீன்மூர்த்தி – ஹைஃபா சதுக்கத்தில் நாங்கள் அஞ்சலி செலுத்தினோம்” என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

*****