பி.எம்.இந்தியா
முத்ரா திட்டத்தின் மூலம் நாடுமுழுவதும் பயனடைந்த பயனாளிகளில் 100-க்கும் மேற்பட்டவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் நாளை கலந்துரையாடுகிறார்.
இளைஞர்களிடையே தொழில்முனைவோர் திறனை ஊக்குவிக்கும் வகையில், உத்தரவாதம் ஏதுமின்றி எளிதில் கடனுதவி வழங்கும் மத்திய அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றாக, பிரதமரின் முத்ரா திட்டம் உள்ளது. 2018 மார்ச் 23 வரை, 4,53,51,509 கடன்கள் ஒப்பளிக்கப்பட்டு, ரூ. 2,28,144.72 கோடி அளவிற்குக் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், இதுவரை மொத்தம் ரூ. 220596.05 கோடி வழங்கப்பட்டுள்ளது.
நிறுவனம் சாராத சிறுதொழில் துறையினருக்கு நிதியுதவி கிடைப்பதை உறுதி செய்து, ஊக்கப்படுத்தும் வகையில், 2015 ஏப்ரல் 8 அன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது. எளிதில் அணுகும் வகையில், இந்தக் கடனுதவி, சிஷு, கிஷோர், தருண் ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ், ரூ. 10 லட்சம் வரையிலான அனைத்துக் கடன்களும், வருமானம் ஈட்டும் நடவடிக்கையாகக் கருதப்பட்டுப் பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ், கடனுதவி வழங்கப்படும். ரூ.50,000 வரையிலான கடன்கள் சிஷு துணைத் திட்டத்தின் கீழும், ரூ.50,000 முதல் 5 லட்சம் வரை கிஷோர் துணைத் திட்டத்தின் கீழும், ரூ. 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை தருண் துணைத் திட்டத்தின் கீழும் கடனுதவி வழங்கப்படுகிறது.
வேளாண் சார்ந்த பணிகள் (பயிர்க்கடன், கிணறு வெட்டுதல், கால்வாய் அமைத்தல், பாசன வசதி ஏற்படுத்துதல் போன்ற நிலமேம்பாடு பணிகள் தவிர) மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு உறுதுணையான அல்லது வருவாய் ஈட்டும் சேவைகளும் 2016 ஏப்ரல் முதல் பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.
On 11th April, I look forward to a special programme! I will be interacting with beneficiaries of the Mudra Yojana at my residence. It would be wonderful to speak to them and personally hear about their journeys.
— Narendra Modi (@narendramodi) April 8, 2018