Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முன்னாள் எம்பி திரு மாஸ்டர் மதன் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


முன்னாள் எம்பி திரு மாஸ்டர் மதன் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

திரு மாஸ்டர் மதன் சமுதாயத்துக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் ஆற்றிய சேவைகளுக்காக என்றென்றும் நினைவு கூரப்படுவார் என திரு மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

“முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு மாஸ்டர் மதன் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவர் தமது சமூக சேவை முயற்சிகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்ததற்காகவும் என்றென்றும் நினைவுகூரப்படுவார். தமிழகத்தில் எங்கள் கட்சியை வலுப்படுத்தவும் அவர் அரும்பாடு பட்டார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும்  எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி.”

****

PKV/DL