பி.எம்.இந்தியா
[
130KB ]
முன்னாள் மாலத்தீவு அதிபரும் மாலத்தீவுகளின் பிராகரசிவ் கட்சி தலைவருமான திரு. மோமூன் அப்துல் கயூம் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார். “தில்லி நிலையான வளர்ச்சி” மாநாடு 2015ல் கலந்து கொள்ள வந்துள்ள திரு. மோமூன் அப்துல் கயூமை பிரதமர் வரவேற்றுள்ளார். இந்த சந்திப்பின் போது பிரதமர் தெரிவித்ததாவது:-
மாலத்தீவுகளுடனான உறவை இந்தியா முக்கியமாகக் கருதுகிறது. வரலாறு லட்சியங்களை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்கின்றன. அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் இரு நாடுகளும் ஆர்வம் கொண்டுள்ளன. திடமான, அமைதியான மற்றும் செழிப்பான நாட்டை உருவாக்க மாலத்தீவுகள் அரசிக்கும் மக்களுக்கும் இந்தியா உதவ தயாராக உள்ளது. மாலத்தீவுகளுக்கு விரையில் பயணம் செய்ய இருக்கிறேன். வர்த்தகம், சுற்றுலா, இளைஞர் நலன், பரிமாற்றம் ஆகிய துறைகளில் இந்தியாவுக்கும் மாலத்தீவுகளுக்கும் இடையேயான பன்முகத்தன்மை கொண்டு உறவை மேம்படுத்த இந்த பயணம் ஒரு வாய்ப்பாக அமையும் என்று பிரதமர் தெரிவித்தார்.
மாலத்தீவுகளின் ஓட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவி அளித்து வருவதற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு திரு. கயூம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இந்தியாவுடனானா உறவு மண்டல அளவில் மட்டுமில்லாமல், உலக அளவில் மிக முக்கியமானதாக மாலத்தீவுகள் கருதுகிறது என்று திரு. கயூம் தெரிவித்தார்.
தட்பவெப்ப நிலை மாற்றங்களால் வளரும் நாடுகள், முக்கியமாக சிறு தீவுகள் சந்திக்கும் சவால்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.