Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மும்பை கலைச் சமூகத்தின் புதிய கட்டிடத்தை பிரதமர் துவக்கி வைத்தார்

மும்பை கலைச் சமூகத்தின் புதிய  கட்டிடத்தை பிரதமர் துவக்கி வைத்தார்


மும்பை கலைச் சமூகத்தின் புதிய கட்டிடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது :

மூன்று நூற்றாண்டுகளாக ஒரு நிறுவனம் தனது முத்திரையை பதித்து வருவது என்பதை அரிதான விஷயமாகும். 19 – வது நூற்றாண்டில் துவங்கப்பட்ட மும்பை கலை சமூகம் இதனை செய்துள்ளது. இதற்குக் காரணம் கலைக்கென்றே தனி பலமும் செய்தியும் உண்டு.

கலை என்பது சுவர்களை அலங்கரிக்கும் விஷயம் மட்டுமல்ல. சமூகத்திற்கு வலிமை அளிக்கும் தூணாகவும் விளங்குகிறது. குழந்தைகளின் ஒட்டு மொத்த ஆளுமை வளர்ச்சியிலும் பங்கு வகிக்கின்றது. இயந்திர காலத்திலும், தனிநபர்களின் மனின நேயத்தை தக்க வைக்க கலை உதவுகிறது.

கலை என்பது நிறுவனம் சார்ந்து இருக்கக் கூடாது. நிறுவனங்கள் கலைகளைக் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும்.

ஏ.ஆர்.டி (கலை) என்ற எழுத்துக்கள் ஏ – ஏஜ்லெஸ்நெஸ் (வயதுவரம்பின்றி), ஆர் – ரேஸ்லெஸ்நெஸ் ( இனம் அற்ற ) டி – டைம் லெஸ்நெஸ் (காலத்தை வென்ற) என்பதை விரிவிக்கின்றன.

ஒரு கலை உருவாக்கும் முறையை கணிணி தொழில் நுட்பம் மூலம் ஆவணப்படுத்த வேண்டும். இது கலைஞர்களின் செயல் முறைகளை புரிந்து கொள்ள மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று பிரதமர் கூறினார்.