பி.எம்.இந்தியா
பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, மும்பை நகர போக்குவரத்துத் திட்டம் (எம்.யூ.டி.பி)- பகுதி 3-க்கு தனது ஒப்புதலை வழங்கியது.
ரூ.8,679 கோடி மதிப்பிலான இத்திட்டம், ரூ.10,947 கோடியில் நிறைவு பெறும். இத்திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்குள், 13வது திட்டக் காலத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு ரயில்வே, தற்போது மும்பை-அகமதாபாத்/டெல்லி தடத்தில் ஒரு பகுதியாக உள்ள விரார்-தஹானு சாலை இடையே உள்ள போக்குவரத்து அதிகமுள்ள இரண்டு வழி தடத்தில் புறநகர் சேவைகளை நடத்தி வருகிறது. முக்கிய தடத்தில் ஏற்கனவே அதிக சேவைகள் உள்ளதால், இத்தடத்தில் புறநகர் சேவைகளுக்கு வசதி செய்ய எந்த வழியும் இல்லை. விரார்-தானு சாலை இடையே கூடுதலாக இரட்டை வழித்தடம் அமைப்பது, இப்பகுதி பயணிகளின் கோரிக்கையை பூர்த்தி செய்யும். இது சர்ச்கேட் முதல் தஹானு சாலை வரையிலான புறநகர் சேவையை விரிவாக்கும். பான்வேல்-கார்ஜத் இரட்டை தட புறநகர் சேவை, நகரமயமாகவும், சமீபத்தில் மக்கள்தொகை அதிகரித்துள்ள இப்பகுதியின் தேவையை பூர்த்தி செய்யும். இது, பான்வேல் வழியாக கார்ஜத் முதல் சி.எஸ்.டி.எம். வரையிலான தடத்திற்கு மாற்று வழியாக அமைவதோடு, தற்போது கல்யான் வழியான தடத்தில் உள்ள 23 கி.மீ. தூரத்தையும் குறைப்பதோடு, சி.எஸ்.டி.எம். முதல் கார்ஜத் வரை மெதுவாக செல்லும் ரயில்களின் பயண நேரத்தை 35 முதல் 40 நிமிடங்கும் குறைக்கும்.
தற்போது, கல்யாண் முதல் வாஷி/பன்வேல் அல்லது எதிர்திசையில் பயணிக்கும் பயணிகள், தானேவில் இறங்கி, ட்ரான்ஸ் ஹார்பர் இணைப்பு வண்டியை பயன்படுத்துகின்றனர். இது ஏற்கனவே மத்திய ரயில்வேயில் அதிக போக்குவரத்துள்ள தானேவில் மேலும் அதிக நெருக்கடியை ஏற்படுத்தும். ஐரோலி-கால்வா வழித்தடம் தானே நிலையத்தில் நெருக்கடியை குறைப்பதோடு, தானேவை கடந்து செல்லும் பயணிகளுக்கு நேரத்தை மிச்சப்படுத்தும். புதிய பெட்டிகளை கொள்முதல் செய்வது தரத்தை உயர்த்துவதோடு, நெருக்கடியையும் குறைக்கும். 22 இடங்களில் எல்லைமீறு கட்டுப்பாட்டின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள், எல்லைமீறுவதை கணிசமாக குறைப்பதோடு, பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை அளிக்கும்.
தானே, பால்கார், ராய்காட் மற்றும் மகராஷ்டிராவின் மும்பை மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் இத்திட்டத்தின் கீழ் அடங்கும்.
பின்னணி :
மத்திய மற்றும் மேற்கு ரயில்வேகளில் மும்பை புறநகர் ரயில் போக்குவரத்து 376 கி.மீ. தூரத்தை கொண்டுள்ளது. இவற்றில் மேற்கு ரயில்வேயின் இரண்டு தரடங்கள், மத்திய ரயில்வேயின் இரண்டு தடங்கள் மற்றும் மத்திய ரயில்வேயின் துறைமுக தடம் உள்ளிட்ட ஐந்து தடங்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் 2900 ரயில் சேவைகளில் புறநகர் பகுதியில் உள்ள ஏறத்தாழ 8 மில்லியன் பயணிகள் பயணிக்கின்றனர். புறநகர் ரயில்களில் அளவுக்கதிமான கூட்டம் உள்ளது, குறிப்பாக நெருக்கடியான நேரங்களில். மும்பையில், பூளோக கட்டுப்பாட்டின் காரணமாக, பரந்துள்ள மக்கள்தொகை மற்றும் வாணிப பகுதிகளின் இடங்கள் ஆகியவற்றின் காரணமாக ரயில்வே மக்களுக்கு முதன்மையான போக்குவரத்தாக தொடர்ந்து இருந்து வருகிறது. வளர்ந்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் பான்வேல்-கார்ஜத் (28 வழி கி.மீ.), ஐரோலி-கால்வா இடையே புதிய உயர்த்தப்பட்ட வழித்தம் (3 வழி கி.மீ.) ,விரார்-தானு சாலை இடையே நான்கு மடங்கு உயர்த்துதல் (63 வழி கி.மீ.), 565 புதிய பெட்டிகள் மற்றும் நடுபகுதிகளுக்கு எல்லைமீறு கட்டுப்பாடு போன்றவற்றை கொள்முதல் செய்தல் ஆகியவை மும்பை நகர போக்குவரத்து திட்டம் (எம்.யூ.டி.பி.) – பகுதி 3-ல் அடங்கும்.