Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்ற பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு உலகத் தலைவர்களின் வாழ்த்துச் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன


மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, உலகத் தலைவர்களின் வாழ்த்துச் செய்திகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். உலகத் தலைவர்களின் செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிலளித்தார்.

கியூபா குடியரசின் அதிபர் திரு மிகுவல் டியாஸ்-கேனல் பெர்முடெசின் பதிவுக்குப் பதிலளித்த பிரதமர், “உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. கியூபாவுடனான நமது இருதரப்பு உறவுகளை மேம்படுத்த நாம் உறுதிபூண்டுள்ளோம். அவை மக்களுக்கு இடையிலான பழமையான இணைப்பில் வேரூன்றி உள்ளன”, என்று குறிப்பிட்டார்.

***

(Release ID: 2024266)

SG/RR