பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, மூலக் கூட்டுப் பொருட்கள் துறையில் இந்தியா ஜெர்மனி இடையே மேக் இன் இந்தியா திட்டத்துக்காக மூலக் கூட்டுப் பொருட்கள் துறை மற்றும் தொழில் ஆராய்ச்சிக்கான, ஐரோப்பாவில் முன்னோடியாக உள்ள 65 நிறுவனங்களின் கூட்டமைப்பான ஜெர்மனியின் ஃப்ரான்ஹோவர் கெசல்ஷாப்ட் (ஃப்ரான்ஹோவர்) உடன் நடந்த ஒப்பந்தத்துக்கு
மத்திய கனரகத் தொழில்துறை மற்றும் ஃப்ரான்ஹோவர் அமைப்போடு செய்து கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் நோக்கம், 12வது ஐந்தாண்டுத் திட்டத்தின்படி, இந்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கும், மூலக் கூட்டுப் பொருள் துறைக்கும் தொழில்நுட்பத்தில் ஏற்படும் குறைபாடுகளை சரி செய்வதற்கும், ஃப்ரான்ஹோவர் அமைப்பின் தொழில்நுட்ப திறன்களை பயன்படுத்திக் கொள்ளவும் ஆகும்.
ஃப்ரான்ஹோவர் அமைப்பு ஒரு தொழில்நுட்ப பங்குதாரராக, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்காக, உற்பத்தித் துறை மத்திய அரசு மற்றும் தொழில் துறையோடு ஒத்துழைப்பை நல்கும். இந்திய மூலக் கூட்டுத் துறைக்கு தேவையான முன்னேறிய தொழில்நுட்பத்தை ஃப்ரான்ஹோவர் அமைப்பு வழங்கும்.