பி.எம்.இந்தியா
இருநாடுகளுக்கிடையிலான இருநாள் பயணமாக இந்தியாவிற்கு வந்திருக்கும் மெக்சிகோ நாட்டின் வெளியுறவு அமைச்சர் செல்வி. கிளாடியா ருய்ஸ்-மாஸியு இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது 2015 செப்டம்பரில் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது மன்றக் கூட்டத்தின்போது மெக்சிகோ அதிபர் நியெடோவை சந்தித்ததை பிரதமர் நினைவு கூர்ந்தார். எரிசக்தி, உற்பத்தித் துறை, கட்டமைப்பு வளர்ச்சி, நகர, சிறு நகர திட்டமிடல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விண்வெளி, விவசாயம், சுகாதாரம் மற்றும் பாரம்பரிய மருத்துவம் ஆகியவை உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கு இடையே கூட்டுறவை வலுப்படுத்துவதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.
மெக்சிகோவின் வெளியுறவுத் துறை அமைச்சர் அனைத்து துறைகளிலும் இந்தியாவுடனான இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்த மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகக் கூறினார். மெக்சிகோவிற்கு வருகை தருமாறு பிரதமரை அவர் மெக்சிகோ அதிபரின் சார்பில் கேட்டுக் கொண்டார்.
•••••••
Mexico's Foreign Minister @ruizmassieu called on PM @narendramodi. pic.twitter.com/7CEg2pPWyJ
— PMO India (@PMOIndia) March 11, 2016