பி.எம்.இந்தியா
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் படகு கவிழ்ந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தத் துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் தமது இரங்கலைத் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்துள்ளார்.
உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்தார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் படகு கவிழ்ந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றன. இந்தத் துயரமான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்.”
***
(Release ID: 2284324)
SS/SMB/KR
The loss of lives due to the capsizing of a boat in the South 24 Parganas district of West Bengal is deeply painful. My thoughts are with the bereaved families in this hour of grief. May the injured recover at the earliest.
— PMO India (@PMOIndia) July 13, 2026
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given…
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় নৌকাডুবিতে প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। শোকসন্তপ্ত পরিবারগুলিকে জানাই সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
— PMO India (@PMOIndia) July 13, 2026
প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রত্যেক মৃতের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০,০০০…