Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மேற்கு வங்காளம் ஜல்பாய்குரியின் தூப்குரியில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்; பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உதவித்தொகை வழங்க உத்தரவு


மேற்கு வங்காளத்தின் ஜல்பாய்குரியிலுள்ள தூப்குரியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உதவித்தொகையும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்திகளில், “ஜல்பாய்குரியிலுள்ள (மேற்கு வங்காளம்) தூப்குரியில் நேரிட்ட சாலை விபத்து மிகவும் வேதனைக்குரியது. இந்த துயர தருணத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரார்த்தனை செய்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.

மேற்கு வங்காளத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 இலட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

******