பி.எம்.இந்தியா
யோசாகனத்தின் பயன்கள் மற்றும் அதன் எல்லைகள் குறித்த சர்வதேச மாநாட்டை, பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், கர்நாடகா, ஜிகானியில் தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த மருத்துவ மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
அவ்விழாவில் பிரதமரின் உரை பின்வருமாறு :
கர்நாடக மாநில ஆளுனர் திரு வாஜுபாய் வாலா அவர்களே, கர்நாடக முதலமைச்சர் திரு சித்தாராமைய்யா அவர்களே, என்னுடைய அமைச்சரவை சகாக்களே, டாக்டர் நாகேந்திரா அவர்களே, மேடையில் வீற்றிருக்கும் முக்கிய பிரமுகர்களே, உலகெங்கும் இருந்து வருகை தந்திருக்கும் யோகாசன ஆர்வலர்களே.
யோகாசனத்தின் எல்லைகள் மற்றும் அதன் பயன்கள் குறித்த 21வது சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த விவேகானந்தா யோகா அனுசந்தன் சன்ஸ்தான் அமைப்புக்கு எனது நன்றிகள். விவேகானந்தரின் சிந்தனைகள், இந்திய மற்றும் மேற்கத்திய தத்துவங்களின் கலவையாகவும், இந்தியாவின் புராதான தத்துவங்களின் சாரங்களையும் கொண்டது. இந்தியாவின் ஆன்மீக மீட்டெடுப்பை மட்டும் அவர் செய்யவில்லை. நமது காலத்தைக் கடந்த ஞானத்தை உலகத்திற்கு எடுத்துரைத்தார். மனிதகுலத்தின் பன்முகத்தன்மை குறித்து ஆழ்ந்த புரிதல் கொண்டிருந்த விவேகானந்தர், உலக ஒற்றுமைக்காக வாதிட்டார்.
இந்த ஆண்டு, யோகாசன விஞ்ஞானத்துக்கு ஒரு சிறப்பான ஆண்டு. 21 ஜுன் அன்று, உலகின் 192 நாடுகளைச் சேர்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள், ஒன்றாக சேர்ந்து உலய யோகா தினத்தை கொண்டாடினர். யோகாவுக்கு உலகெங்கும் கிடைத்த பெரும் ஆதரவு, அதற்கு பெருகி வரும் புகழை சுட்டிக்காட்டியது. நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்துக்கான உலகத்தின் விருப்பத்தையும் அது சுட்டிக்காட்டுகிறது. மனித குலத்துக்கும், இயற்கை அன்னைக்கும், நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையே அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் ஏற்பட்டுள்ள வரவேற்பை இது காட்டுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள், தங்கள் எல்லைகளை கடந்து, ஒரு நல்ல விஷயத்துக்காக ஒன்றிணையும் திறனையும் அது வெளிப்படுத்தியது. இந்த ஒற்றுமை உணர்வு, யோகா அறிவியலின் காலத்தை கடந்த தன்மையை எடுத்துக் காட்டுகிறது.
யோகாசனத்தின் மீது எனக்கு உள்ள இந்த நம்பிக்கை மற்றும் மனிதத்தின் மீதான நம்பிக்கையின் அடிப்படையிலேயே நான் செப்டம்பர் 2014ல் ஐக்கிய நாடுகள் அவையில் எனது தொடக்க உரையில் இது குறித்து பேசினேன். உலகத்தின் நிலையான எதிர்காலத்துக்கு, ஆரோக்கியமான பழக்கங்களும், மகிழ்ச்சியான மக்களும், வாழ்க்கை முறையில் மாற்றமும், தனி நபர்கள் எடுக்கும் முடிவுகளும், தேசங்களும், உலக சமூகம் எடுக்கும் முடிவுகளும் முக்கியமானவையாகும்.
உலகிற்கு இந்த உண்மை படிப்படியாக புரிய வருகிறது. கலாச்சாரங்களையும், பூகோள எல்லைகளையும் கடந்து, யோகாசனம் வெளியுலகுக்கும் உள் மனதுக்குமான தொடர்பையும், அவர்கள் இருப்புக்கும் சுற்றுச் சூழலுக்குமான தொடர்பையும் பலப்படுத்தவல்லது என்பதை உணரத் தொடங்கியுள்ளனர்.
உலக சுகாரார நிறுவனத்தின் அறிக்கையொன்று, பரவாத நோய்களே, பெரும்பாலான மரணங்களுக்கு காரணம் என்று கூறுகிறது. 2008ம் ஆண்டில் வளரும் நாடுகளில் 80 சதவிகிதமான மரணங்கள் இது போன்ற நோய்களாலேயே ஏற்பட்டன. 1990ம் ஆண்டில் இது 40 சதவிகிதமாக இருந்தது. 2030ம் ஆண்டில், குறைந்த வருவாய் நாடுகளில், பரவாத நோய்களின் மூலமாக ஏற்படும் மரணம், அதிக வருவாய் நாடுகளை விட எட்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்று ஆய்வு கூறுகிறது.
இந்தியாவில், இதய நோய்கள், புற்றுநோய், மூச்சுத் திணறல் தொடர்பான நோய்கள், நீரிழிவு நோய், மற்றும் இதர பரவாத நோய்கள், 60 சதவிகித இறப்புக்கு காரணமாக இருக்கின்றன. இந்த நோய்களே, மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக இருக்கும் 40 சதவிகிதம் பேருக்கும், வெளிநோயாளிகளாக இருக்கும் 35 சதவிகிதத்தினருக்கும் காரணமாக இருக்கின்றன.
பயனுள்ள வாழ்க்கைகள் முடிவுறுவதையும், குடும்பங்கள் இழப்பினால் தவிப்பதையும், பொருளாதாரத்தில் அதன் தாக்கம் ஏற்படுவதையும், சுகாதாரத்துறையில் அதன் பாதிப்பு தெரிவதையும் காண்கிறோம். 2030ம் ஆண்டுக்குள் இத்தகைய பரவாத நோய்கள் மற்றும் மனநோய் காரணமாக இந்தியா 4.58 ட்ரில்லியன் டாலர்களை இழக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதனால், நமது மன ஆரோக்கியத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் முன்னேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
இந்த இடத்தில்தான் யோகாசனம் முக்கிய பங்கு வகிக்கிறது. யோகாசனத்தால் மாற்றப்பட்ட வாழ்வுகள், புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கைகள் குறித்து பல்வேறு கதைகள் வருகின்றன. “இந்திய யோகாசனம் மனித இனத்தின் எதிர்காலத்தின் முக்கியமான கூறுகளில் ஒன்று” என்று சுவாமி அரபிந்தோ கூறியது உண்மையாகி வருகிறது.
யோகாசனம் ஒரு மருத்துவ முறையாக கண்டுபிடிக்கப்படவில்லை. யோகாசனம், உடல்ரீதியான, மனரீதியான, உணர்வுரீதியான, ஆன்மீக ஒருங்கிணைவை தரக்கூடியது என்பதால், அது ஆரோக்கியத்துக்கான பலன்களையும் அளிக்கிறது.
உலகம் ஆரோக்கியத்தை பார்க்கும் முறை மாறி வருவது யோகாசனத்துக்கு ஏற்ற வகையில் உள்ளது. நோய்களை கட்டுப்படுத்துவதோடும், தவிர்ப்பதோடும் நம் பணி முடிந்து விட்டதாக நாம் திருப்தி கொள்ள முடியாது. மனது, உடல், ஆன்மா மூவற்றையும் ஒருங்கிணைக்கும் நல்ல நிலையை மக்கள் எதிர்ப்பார்க்க தொடங்கி விட்டார்கள். உடனடி நோய்களை தீர்ப்பதோடு அல்லாது, உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், சமூகரீதியாகவும், ஆன்மீகரீதியாகவும் ஒரு முழுமையான தீர்வு வேண்டும் என்ற குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள், மனிதனை முழுமையாக பார்க்கும் தன்மை படைத்தது. ஆதி என்று அழைக்கப்படும் மனரீதியான சிக்கல்களையும், வியாதி என்று அழைக்கப்படும் உடல்ரீதியான சிக்கல்களுக்கும் இடையே உள்ள இணைப்பை அவை ஆராய்கின்றன. அவை வெறும் அறிகுறிகளை பார்க்காமல், அடிப்படை காரணங்களை ஆராய்கின்றன. அவை முழுமையான சிகிச்சை அளிக்கின்றன. நோய்களை மட்டும் குணப்படுத்துவதில்லை. முழுமையாக குணமாவதற்கு காலம் எடுக்கலாம். ஆனால், அவை மிகவும் ஆழமான மட்டும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எவ்விதமான பக்கவிளைவுகளும் இன்றி.
இன்று காலை நடந்த அறிவியல் மாநாட்டில் நான் கூறியபடி, புராதான அறிவைப் போலவே அறிவியலும் மனித அனுபவத்தாலும், இயற்கையை ஆராய்ச்சியளாலும் வளர்ந்துள்ளது. ஆகையால், அறிவியல் மட்டுமே, உலகில் உள்ள அனைத்துக்குமான தீர்வை கொண்டுள்ளது என்று நாம் கருத முடியாது.
ஹிப்போக்ராட்டீஸ் முதல், பெர்விக்கல் மற்றும் எடிசன் ஆகிய விஞ்ஞானிகள் ஆரோக்கியம் குறித்து தெரிவித்த கருத்துக்கள், இந்திய தத்துவத்திற்கு எதிரானவை அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
காலங்காலமாக நாம் சேர்த்து வைத்த ஞானத்தையும், அனுபவத்தையும், தற்போது உள்ள நவீன விஞ்ஞான முறைகளை வைத்து அளவிட்டு, அதன் முடிவுகளை ஆராய வேண்டும். இதன் காரணமாகத்தான், விழிப்புணர்வை அதிகரித்து, ஆயுஷ் மருத்துவ முறைகளை கையாள வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். இதன் மூலமாக நாம் மக்களின் ஆரோக்கியத்தை வளர்த்து, உள்ளுர் மருத்துவ முறைகளை கையாண்டு, ஆரோக்கியத்துக்கான செலவுகளை குறைக்க முயன்று வருகிறோம். சுற்றுச் சூழலுக்கு ஏற்ற முறையில் மருத்துவ முறைகளை உருவாக்கி அதற்கான பொருளாதார செலவுகளை குறைப்போம்.
ஒரு மருத்துவ முறையை விட மற்றொரு மருத்துவ முறை சிறந்தது என்பதை வாதிடுவதற்காக நான் இங்கே வரவில்லை. மனித இனத்தின் பன்முகத்தன்மையால் மனித இனம் வளமையானது என்று கூறுகிறேன். நாகரீகங்கள், கலாச்சாரங்கள், மற்றும் நாடுகள் தங்கள் அறிவையும் ஞானத்தையும் பகிர்ந்து கொண்டு வளமடைந்துள்ளன. நாமும் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொண்டு முன்னேறுவோம். இந்த அடிப்படையில்தான், விவேகானந்தர், கிழக்கு மற்றும் மேற்கின் சிறந்த அறிவை இணைக்க வேண்டும் என்று கூறினார். ஆகையால், உடல் நலத்துக்கான எனது திட்டம், நமது சிறந்த பாரம்பரிய முறைகளை ஒன்றிணைத்து அவற்றில் சிறந்தவற்றை பயன்படுத்த வேண்டும் என்பதே.
இதனால்தான் யோகா, ஆயுர்வேதா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி மற்றும் நவீன மருத்துவத்தை ஒருங்கிணைக்கும் உங்கள் முயற்சியை வரவேற்கிறேன். நான்கு முக்கிய பரவாத நோய்களான நீரிழிவு, புற்றுநோய், மனநோய்கள், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களின் மீதான உங்கள் கவனத்தை அதிகரிப்பதை வரவேற்கிறேன். இது எனது இதயத்துக்கு நெருக்கமான விஷயங்களை விவாதிக்கிறது.
நவீன மருத்துவம் நோய்களை கண்டுபிடிப்பது, ஆராய்வது, பகுத்தாய்வது ஆகிய முறைகளில் பெரும் மாற்றத்தை அடைந்துள்ளது. நவீன மருத்துவத்தின் வளர்ச்சி, நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் உள்ள தடைகளை நீக்கி, நோய்களின் கூறுகளை புரிந்து கொள்ள வைத்துள்ளது. மருத்துவ அறிவியலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் தடுப்பு மருந்துகள், பல நோய்களை கட்டுப்படுத்தி தடுக்க உதவியுள்ளன.
அதே நேரத்தில், அவற்றின் பக்க விளைவுகள் குறித்தும், நவீன மருத்துவத்தின் அதிக செலவுகள் குறித்தும் புரிந்து கொண்டுள்ளோம். இதன் காரணமாக, இந்தியா மட்டுமின்றி, உலகங்கும் பாரம்பரிய மருத்துவத்தை நாடிச் செல்லத் தொடங்கியுள்ளனர். பாரம்பரிய மருத்துவத்தின் புகழ் அதிகரித்து வருகிறது. யோகாசனம் ஒரு உலகக் கலை. இந்தியாவின் பாரம்பரிய மருத்துவத்தை, உலகமே ஆவலோடு தழுவி வருகிறது.
ஆகையால் உங்களின் இந்த மாநாட்டை, உலக மனிதகுலத்துக்கான சேவையாக பார்க்கிறேன்.
மருத்துவர்கள், கொள்கை முடிவெடுப்பவர்கள், அரசு நிறுவனங்கள், தொழில்துறை ஆகியோர், பல்வேறு மருத்துவ முறைகளுக்கிடையே உள்ள இடைவெளியை குறைப்பதற்காக உழைப்பார்கள் என்று நம்புகிறேன்.
யோகாசனத்தையும், பாரம்பரிய இந்திய மருத்துவத்தையும் நமது சுகாதாரத்தோடு இணைத்து, இந்தியா முழுமைக்கும், உலகத்துக்கும் சிறந்த உடல் நலனை வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.
சிறந்த உடல் ஆரோக்கியத்துக்கும், மகிழ்ச்சியான வாழ்வுக்கு மட்டும் நீங்கள் பாடுபடப்போவதில்லை, மாறாக, ஒரு அமைதியான மற்றும் வளமான உலகுக்காகவும், நமது கோளத்தின் எதிர்காலத்திற்காகவும் பாடுபடப்போகிறீர்கள்.
நன்றி.
***
Swami Vivekananda's vision was a deep reading of Indian & Western thought & drew its spirit from our ancient philosophy & knowledge: PM
— PMO India (@PMOIndia) January 3, 2016
Swami Vivekananda placed our timeless wisdom before the world: PM @narendramodi at a Yoga Conference https://t.co/TAsStb5hm0
— PMO India (@PMOIndia) January 3, 2016
On June 21 more than a million people in 192 countries came together to celebrate the first International Day of Yoga: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 3, 2016
The overwhelming global support is a mark of Yoga's growing international popularity: PM @narendramodi at Yoga Conference
— PMO India (@PMOIndia) January 3, 2016
Across cultures and geography, people are increasingly taking to yoga to redefine their lives: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 3, 2016
Across the world there are moving stories of transformed lives and rekindled hopes due to Yoga: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 3, 2016
We need to create the best quality Yoga teachers: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 3, 2016
We are placing emphasis on our efforts to increase awareness, acceptance and adoption of Ayush System of Medicine: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 3, 2016
We will also reduce the social and economic costs to our society and promote a more environment friendly healthcare system: PM
— PMO India (@PMOIndia) January 3, 2016
Humanity is wealthier for its diversity: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 3, 2016
My vision for healthcare is an integrated system that understands and builds on the best and most effective of different traditions: PM
— PMO India (@PMOIndia) January 3, 2016
Yoga is now a global heritage. And, the world is embracing traditional Indian medicine with great enthusiasm: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 3, 2016