Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரயில்வேத் துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்த இந்தியா-பிரான்ஸ் புரிந்துணர்வு ஓப்பந்தம் குறித்து மத்திய அமைச்சரவைக்கு எடுத்துரைக்கப்பட்டது.


ரயில்வேத் துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்த இந்திய ரயில்வேக்கும், பிரான்ஸ் நாட்டின் அரசுக்கு சொந்தமான எஸ் என் சி எஃப் மொபிலிட்டிஸ் நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஓப்பந்தம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கு எடுத்துரைக்கப்பட்டது. 2018 மார்ச் 10ம் தேதி இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

ரயில்வே துறையில் நவீன மேம்பாடுகள், அறிவு ஆகியவை குறித்து கலந்துரையாடலும், கருத்துப்பரிமாற்றம் செய்யவும் இந்திய ரயில்வேக்களுக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேடை அமைத்து தருகிறது. இந்த ஒப்பந்தப்படி தொழில்நுட்ப நிபுணர்கள், அறிக்கைகள், தொழில்நுட்ப ஆவணங்கள், பயிற்சிகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள் ஆகியவற்றின் பரிவர்த்தனைக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. குறிப்பிட்ட தொழில்நுட்ப பகுதிகளில் மற்றும் இதர கருத்துப்பரிமாற்ற அறிவுப்பகிர்வு நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்த இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

கீழ்க்கண்ட பகுதிகளில் முக்கிய கவனம் செலுத்தும் அணுகுமுறைகள் தொடர்பான ஒத்துழைப்பு கட்டமைப்புக்கு இந்த ஒப்பந்தம் வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறது.

1) அதிவேக மற்றும் ஓரளவு அதிவேக ரயில்கள்

2) ரயில்நிலைய புதுப்பிப்பு மற்றும் செயல்பாடு

3) தற்போதைய நடைமுறைகள் மற்றும் அடிப்படை வசதிகளை நவீனமயமாக்குவது

4) புறநகர் ரயில்கள்
பின்னணி:

பல்வேறு வெளிநாட்டு அரசுகள் மற்றும் தேசிய ரயில்வேக்களுடன் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ரயில்வே அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. ஒத்துழைப்புக்கென அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் அதிவேக ரயில்பாதைகள், தற்போதுள்ள வழித்தடங்களில் வேகத்தை உயர்த்துதல், உலகத்தர ரயில் நிலையங்களை உருவாக்குதல், கனரக சரக்கு செயல்பாடு, ரயில் கட்டமைப்பை நவீனமயமாக்குதல் ஆகியவன அடங்கும். ரயில்வே தொழில்நுட்பம் மற்றும் செயல்பாடுகளில் தகவல் பரிமாற்றம், அறிவு பகிர்வு, தொழில்நுட்ப பயணங்கள், பயிற்சிகள், பயிலரங்குகள் ஆகியவற்றின் மூலம் இந்த ஒத்துழைப்பு எட்டப்படுகிறது.

——–