Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரயில்வே ஊழியர்களுக்கான உற்பத்தி திறனுடன் இணைந்த போனஸ் வழங்க அமைச்சரவை ஒப்புதல்


தகுதியுள்ள அரசிதழ் பதிவு பெறாத ரயில்வே ஊழியர்களுக்கு (ரயில்வே பாதுகாப்புப் படை / ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை ஊழியர்கள் தவிர) 2015-16 – ம் நிதி ஆண்டுக்கு 78 நாள் ஊதியத்துக்கு நிகரான உற்பத்தி திறனுடன் இணைந்த போனஸ் வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது. இதன் காரணமாக சுமார் ரூ. 2090.96 கோடி நிதிச் சுமை ஏற்படும்.

உற்பத்தி திறனுடன் இணைந்த போனஸ் வழங்கப்படுவதால் பெரும் எண்ணிக்கையிலான ரயில்வே ஊழியர்கள் ரயில்வேத் துறையின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் உற்பத்திதிறன் நிலைகளை உயர்த்துவதற்கும் ஊக்குவிக்கப்படுவதுடன் தொழிலியல் அமைதியைப் பராமரிக்கவும் உதவுகிறது.

இந்த போனஸ் தகுதியுள்ள ரயில்வே ஊழியர்களுக்கு தசரா / பூஜா விடுமுறைக்கு முன்னதாக வழங்கப்படும்.