Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரவி நாயக் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


கோவா மாநில அமைச்சர் ரவி நாயக் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

கோவா வளர்ச்சி பயணத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த அர்ப்பணிப்புமிக்க பொது சேவையாளராகவும், அனுபவமிக்க நிர்வாகியாகவும் நாயக் என்றும் நினைவு கூரப்படுவார் என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது ;

“கோவா மாநில அமைச்சர் ரவி நாயக் மறைவு கவலையளிக்கிறது. கோவா வளர்ச்சி பயணத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த அர்ப்பணிப்புமிக்க பொது சேவையாளராகவும், அனுபவமிக்க நிர்வாகியாகவும் அவர் என்றும் நினைவு கூரப்படுவார். குறிப்பாக நலிவடைந்த மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரமளித்தலில் ஆர்வமிக்கவராக இருந்தார். இந்த துயரமான தருணத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தாருடனும், ஆதரவாளர்களுடனும் உள்ளது. ஓம் சாந்தி.”

***

(Release ID: 2179191)

SS/IR/AS/KR