Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரவீந்திரநாத் தாகூரின் பகிரப்பட்ட கலாச்சாரப் பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில், பிரதமரும் சுவீடன் பிரதமரும் சிறப்புப் பரிசுகளை பரிமாறிக்கொண்டனர்


நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடியும், சுவீடன் பிரதமர் திரு உல்ஃப் கிறிஸ்டர்சனும் சிறப்புப் பரிசுகளை பரிமாறிக்கொண்டனர்.

குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் கையெழுத்துப் பிரதிகளான பொன்மொழிகளின் இரண்டு பிரதிகள், ஒரு சிறிய விளக்க உரை மற்றும் 1921-ல் உப்சாலா பல்கலைக்கழகத்திற்கு அவர் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பெட்டியை பிரதமர் திரு கிறிஸ்டர்சன் வழங்கினார்.

சமீபத்தில் சுவீடன் தேசிய ஆவணக் காப்பகத்தில் கண்டறியப்பட்ட அசல் பிரதிகள், 1921 மற்றும் 1926-ல் குருதேவ் தாகூர் சுவீடனுக்கு மேற்கொண்ட பயணங்களின்போது அவரால் உருவாக்கப்பட்டவையாகும்.

பிரதமர் திரு மோடி, ரவீந்திரநாத் தாகூரின் படைப்புத் தொகுப்பையும், உள்ளூர் கைவினைஞர்களை மேம்படுத்துவதற்காக குருதேவ் தேர்ந்தெடுத்த உருவங்களைக் கொண்ட சாந்திநிகேதனிலிருந்து பிரத்யேகமாக கையால் செய்யப்பட்ட ஒரு பையையும் பிரதமர் திரு கிறிஸ்டர்சனுக்கு வழங்கினார்.

கலை என்பது கலைக்கூடங்களுக்குள் இருப்பதல்ல, மாறாக அன்றாட பொருட்களுக்கு உயிர் கொடுத்து, அறிவு மற்றும் பயன்பாட்டுக்கு இடையேயான இடைவெளியை இணைப்பதே அதன் நோக்கம் என்ற தாகூரின் தத்துவத்தை அந்தப் பை அடையாளப்படுத்துகிறது.

1913-ல் நோபல் பரிசைப் பெறுவதற்காக குருதேவ் தாகூரால் சுவீடனுக்குப் பயணிக்க முடியாவிட்டாலும், 1921-ல் சுவீடனுக்கு அவர் பயணம் மேற்கொண்டபோது ஐந்தாம் குஸ்தாவ் மன்னரால் அவர் வரவேற்கப்பட்டார். இந்தப் பரிசுகள், இந்தியாவுக்கும் சுவீடனுக்கும் இடையேயான பகிரப்பட்ட கலாச்சார மற்றும் அறிவுசார் பாரம்பரியத்தை அடையாளப்படுத்துவதோடு, ரவீந்திரநாத் தாகூரின் நீடித்த பாரம்பரியத்திற்கு மரியாதையும் அளிக்கின்றன. இந்தப் பரிசுப் பரிமாற்றமானது, 1926-ல் குருதேவ் சுவீடனுக்கு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தின் நூற்றாண்டு விழாவோடும் ஒத்துப்போகிறது.

***

Release ID: 2262093

SS/IR/LDN/SH