Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரஷ்ய அதிபருடன் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரதமர் மோடியின் உரை

ரஷ்ய அதிபருடன் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் 
பிரதமர் மோடியின் உரை

ரஷ்ய அதிபருடன் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் 
பிரதமர் மோடியின் உரை

ரஷ்ய அதிபருடன் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் 
பிரதமர் மோடியின் உரை

ரஷ்ய அதிபருடன் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் 
பிரதமர் மோடியின் உரை

ரஷ்ய அதிபருடன் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் 
பிரதமர் மோடியின் உரை


மேதகு அதிபர் விளாடிமிர் புடின் அவர்களே, பத்திரிக்கையாளர்களே,

ரஷ்ய பயணிகள் விமானமும், சிரியாவில் ரஷ்யாவின் ராணுவ விமானமும் தீவிரவாதத் தாக்குதலால் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு எனது ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொண்டு எனது உரையை தொடங்குகிறேன். இந்த துயரமான தருணத்தில், ரஷ்ய மக்களோடு நாங்கள் இணைந்து நிற்கிறோம்.

அதிபர் அவர்களே, உங்களது அன்பான வரவேற்புக்கு நன்றி. ரஷ்ய இந்திய உறவின் சூத்திரதாரி நீங்கள். மாறி வரும் இவ்வுலகில், உங்களின் தலைமை நம்மை வளர்ச்சிப் பாதையில் முன்னேற வைக்கிறது.

அதிபர் அவர்களே, நமது உறவின் மீது எப்போதும் எனக்கு மிகுந்த மரியாதையும், அன்பும் உண்டு. இந்தியாவின் ராணுவத் துறையிலும், வளர்ச்சியிலும், வெளிநாட்டு உறவிலும், இந்த உறவு ஒரு பெரும் பலமாக இருந்து வருகிறது. இரு நாட்டு மக்களிடையே நல்லெண்ணமும், பரஸ்பர மரியாதையும் நிலவி வருகிறது.

எதிர்காலத்தை நோக்குகையில், இந்தியாவின் பொருளாதார மாற்றத்தில், ரஷ்யா ஒரு முக்கிய பங்குதாரராக இருக்கும். இந்தியாவை ஒரு நிதானமான, நிலையான, துருவம் கடந்த மாற்றத்துக்கு தயாரான ஒரு நாடாக உருவாக்க ரஷ்யா உதவுகிறது. கடந்த இரு நாட்களாக நாம் சிறந்த பேச்சுவார்த்தைகளை நடத்தி, வெற்றிகரமான முடிவுகளை எட்டியிருக்கிறோம். இந்த உறவு ஒரு சிறப்பான உறவு என்ற என் நம்பிக்கையை இது உறுதி செய்திருக்கிறது. நமது எதிர்கால உறவுக்கான அடித்தளத்தை நாம் அமைத்திருக்கிறோம்.

இந்தியாவில், 226 காமோவ் ஹெலிகாப்டர்கள் தயாரிப்பதற்காக, இரு நாட்டு அரசுகளிடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், செய்யப்பட்டுள்ள முதல் ஒப்பந்தமாகும். அது எங்களது பிரதானமான ராணுவ கூட்டணி நாட்டுடன் ஏற்பட்டுள்ளது பொருத்தமாக அமைந்துள்ளது. இது தவிர மேலும் பல்வேறு பாதுகாப்பு தொடர்பான திட்டங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்புத் தயாரிப்புகளை ஊக்கப்படுத்தி, இந்தியாவை அடுத்த தலைமுறை ஆயுதங்களோடு தயார் நிலையில் வைக்கும்.

அணு சக்தியில் இந்திய ரஷ்ய கூட்டுறவு வளர்ந்து வருகிறது. இரண்டு இடங்களில் ரஷ்யாவின் 12 அணு உலைகளை அமைப்பதற்கான திட்டங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், அணு உலை தயாரிப்பில் இந்தியாவின் பங்கை அதிகரிக்கும். இது எனது மேக் இன் இந்தியா திட்டத்துக்கு ஆதரவளிக்கிறது. அதிபர் புடினின் ஆதரவுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இருக்கும் சிறப்பான உறவின் காரணமாக, உலகில் அதிகப்படியான ஹைட்ரோகார்பன்களை வைத்திருக்கும் ரஷ்யா, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு ஒரு முக்கிய தூணாக விளங்கும். ரஷ்ய அதிபர் புடினின் உதவியோடு, ரஷ்ய ஹைட்ரோகார்பன் துறையில், இந்தியாவின் முதலீட்டை அதிகரிக்கிறோம்.

இந்தியா மற்றும் ரஷ்யா இடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு, நானும் அதிபர் புடினும், ஆக்கபூர்வமாக முன்னேறி வருகிறோம். கடந்த மாநாட்டுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே நேரடி வர்த்தகம் நடைபெறும் வகையில் ஒரு சிறப்பு மண்டலத்தை இந்தியா அறிவித்துள்ளது. இதன் மூலம், உலகின் அதிகமான வெட்டப்படாத வைரங்களை உற்பத்தி செய்யும் ரஷ்யாவும், உலகின் 90 சதவிகித வெட்டப்படாத வைரங்களை சரிசெய்யும் நாடான இந்தியாவும் இணைந்து, தொழில் செய்ய முடியும்.

இரண்டாவதாக தளவாடங்கள் குறித்து பணியாற்றி வருகிறோம். எங்களின் பசுமை பாதை திட்டம் செயல்படத் தொடங்கியுள்ளது. ஈரான் வழியாகச் செல்லும் சர்வதேச வடக்கு தெற்கு போக்குவரத்து பாதை, போக்குவரத்துக்கான செலவையும், நேரத்தையும் குறைக்கும்.

மூன்றாவதாக, யூரேசிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் முன்னேறி வருகிறோம். இது மத்திய ஆசியாவில் பயன் தரும்.

நான்காவதாக, தனியார் துறைகள் இணைந்து பணியாற்றுவதை ஊக்குவித்து வருகிறோம். தலைமைச் செயல் அலுவலர்களின் சிறப்பானதொரு கூட்டத்தில் சமீபத்தில்தான் கலந்து கொண்டோம். இன்று ஏற்பட்ட ஒப்பந்தங்களும், அறிவிப்புகளும், முதலீடுகள் பெருமளவில் அதிகரித்து வர்த்தகம் முன்னேறும் என்ற நம்பிக்கையை எனக்கு அளித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையில் நமக்கு நல்ல ஒத்துழைப்பு உள்ளது. ப்ரிக்ஸ் அமைப்பில் நாம் உறுப்பினராக இருப்பது, கிழக்காசிய மாநாடு, ஜி20 மற்றும் சமீபத்திய ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு ஆகியவை நமது உறவுக்கு ஒரு உலகளாவிய தன்மையை அளிக்கிறது. யூரேசியா, ஆசிய பசிபிக், மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றில் இது ஒரு முக்கிய அம்சமாகும்.

பாரபட்சமற்ற வகையில், விருப்பு வெறுப்பின்றி, தீவிரவாதம் தொடர்பாக நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த விஷயத்தில் உலகம் ஒன்றுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நமது நம்பிக்கையில் நாம் ஒன்றாக இருக்கிறோம்.

மேற்காசியா பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வு காணப்பட்டால்தான் அந்தப் பகுதியில் ஸ்திரத்தன்மை ஏற்படும், தீவிரவாதம் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம்.

அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து, மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, நமது காலத்தில் உள்ள இந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.

அதிபர் புடினோடு உள்ள நெருக்கமான உறவுக்காக மகிழ்ச்சியடைகிறேன். இருவரும் இணைந்து நமது உறவுக்கு ஒரு புதிய அழுத்தத்தையும், வலிமையையும் சேர்த்துள்ளோம்.

இந்த ஆண்டு இரு முறை ரஷ்யாவுக்கு வருகை தரும் பேறை பெற்றேன். அடுத்த ஆண்டு ப்ரிக்ஸ் மாநாட்டுக்காகவும், ஆண்டு மாநாட்டுக்காகவும் இந்தியா வரும் புடினை வரவேற்க காத்திருக்கிறேன்.

நன்றி.

****