Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராஜ்கோட் நகரில் சமூக அதிகாரமளித்தல் முகாமில் பங்கேற்ற பிரதமர் மாற்றுத் திறனாளிகளுக்குக் கருவிகளை வழங்கினார்

பிரதமர் மந்திரி திரு. நரேந்திர மோடி குஜராத் ராஜ்கோட் நகரில் சமூக அதிகாரமளித்தல் முகாமில் (சம்ஜிக் அதிகாரிதா ஷிவிர்) இன்று பங்கேற்று உரை நிகழ்த்தினார். அப்போது, அதில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு கருவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மத்திய அரசு நாட்டில் உள்ள ஏழை, எளியவர்களின் நலன்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது என்றார்.

மாற்றுத் திறனாளி சகோதரர்களின் வாழ்க்கையையே மாற்றியமைக்கும் வகையிலான புதிய செயல்களையும் தொழில்நுட்ப முறைகளையும் தொழில்துறையினர் கண்டறிய வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

“மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்காக மத்திய அமைச்சர் டாக்டர் தாவர் சந்த் கெலாட் மற்றும் அவரது தலைமையிலான குழுவினர் பாடுபடுவது வரலாற்றுப் பெருமைக்குரியது. பாராட்டத் தக்கது” என்று புகழ்ந்தார்.

“இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடையும் 2022ம் ஆண்டில் நாட்டில் வீடற்றவர்கள் இல்லை என்ற நிலை எட்டப்படும். அந்த வீடுகள் அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருக்கும்” என்று பிரதமர் உறுதிபடக் கூறினார்.

***