Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரிபப்ளிக் தொலைக்காட்சி உச்சி மாநாட்டில் பிரதமர் உரை

ரிபப்ளிக் தொலைக்காட்சி உச்சி மாநாட்டில் பிரதமர் உரை

ரிபப்ளிக் தொலைக்காட்சி உச்சி மாநாட்டில் பிரதமர் உரை


மும்பையில் இன்று நடைபெற்ற ரிபப்ளிக் தொலைக்காட்சி உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.

மும்பையில் உள்ள மருத்துவமனையில் நேற்று நிகழ்ந்த
தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்தார்.
துடிப்பான, வளமான தேசத்திற்கு ஆக்கப்பூர்வமான செய்திகளின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். அறிவியல், கண்டுபிடிப்பு, விளையாட்டுகள் போன்ற பல்வேறு பரிணாமங்களில் இந்தியா மிகப் பெரிய உயரங்களை எட்ட வேண்டியுள்ளது என்றும், இதை போலவே ஊடகத்திலும் எட்ட வேண்டியிருக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

“எழுச்சி பெறும் இந்தியா” என்ற சொற்கள் 130 கோடி இந்தியர்களின் மனஎழுச்சியை குறிப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, 5 டிரிலியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவது மற்றும் எளிதாக தொழில் துவங்கும் நாடுகளின் பட்டியலில் உயர்ந்த இடத்தை இந்தியா பெறுவது என்பதை கற்பனை செய்து பார்க்கவே கடினமாக இருந்தது என்று பிரதமர் கூறினார். இன்று, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு நீதி எவ்வாறு நிலைநாட்டப்படுகிறது என்பதை பிரதமர் உதாரணங்களுடன் விவரித்தார். கடந்த 4 ஆண்டுகளாக எத்தகைய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை சுகாதாரத்திலிருந்து வரிவிதிப்பு வரை உதாரணங்களுடன் பிரதமர் விளக்கினார். கொள்கை அடிப்படையிலான ஆட்சி, வெளிப்படையான கொள்கைகள் வாயிலாக மத்திய அரசு முன்னேறி செல்வதாக அவர் தெரிவித்தார். உள்கட்டமைப்பின் வளர்ச்சி, அதிவேகத்தில் இருப்பதாகவும் கூறினார். திட்டங்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யும் பிரகதி கூட்டங்கள் மாதந்தோறும் தன் தலைமையில் நடப்பதையும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த வழிமுறையால், ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சட்டங்களை செயல்பாட்டினால் பின்தொடர வேண்டிய அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். இது தொடர்பாக நொடித்துப் போதல் மற்றும் திவாலாவது குறித்த நெறிமுறைகளை அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையை தற்போது தேச நலன் வழிநடத்துவதாக அவர் கூறினார். சர்வதேச அரங்கில் இந்தியாவின் குரல் கேட்கப்படுகிறது.
ஆடம்பர பொருட்கள் போன்று வெகு சில பொருட்களுக்கு மட்டும் 28 விழுக்காடு ஜி.எஸ்.டி வரிவிகிதம் விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்பதை திரு. நரேந்திர மோடி சூசகமாக தெரிவித்தார். எளிய மனிதர்கள் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களுக்கும் 18 விழுக்காடு அல்லது அதற்கு குறைவான ஜி.எஸ்.டி. வரிவிகிதம் உறுதிபடுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

***

வி.கீ / ரேவதி