Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து; டுவிட்டரில் புகைப்படங்களுடன் வாழ்த்தினார்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து; டுவிட்டரில் புகைப்படங்களுடன் வாழ்த்தினார்


ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 60 இந்திய வீரர்கள் ஒவ்வொருவருடனும் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாடினார். இதுபோன்ற செயலை செய்யும் முதல் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆவார்.

ஒவ்வொருவரையும் தனித் தனியே சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர் அவர்களை ஊக்குவித்தார். பிரதமருடன் ‘செல்பி’ எடுத்துக்கொள்ள விரும்பிய பல வீரர்களுடன் ‘செல்பி’ எடுத்துக்கொண்டு அவர்களுடன் கலந்துரையாடினார்.

பின்பு, பிரதமர் வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டு தனது வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டார்.

பிரதமரின் இந்த செயலுக்கு மகிழ்ச்சி தெரிவித்த பல விளையாட்டு வீரர்கள் பிரதமருடன் தாங்கள் எடுத்துக்கொண்ட ‘செல்பிக்களையும்’ பகிர்ந்துகொண்டனர். குத்துச் சண்டை வீரர் மனோஜ் குமார், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் டட் உள்ளிட்ட வீரர்களின் டுவிட்டர் பதிவுகளை பிரதமர் ‘ரீடுவீட்’ செய்தார்.