Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ருவாண்டாவில் உள்ள கிகாலி கூட்டரங்கில் 2018 ஜுலைமாதம் 24ஆம் தேதியன்று இந்திய-ருவாண்டா வர்த்தக பேரவையில் பிரதமரின் உரை


உள்கட்டமைப்புஅல்லது வாழ்க்கைத் தரம் அல்லது ஆளுமை அல்லது பொருளாதாரத் துடிப்பு அல்லதுசுயதேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய குடும்பம் என்று எதுவாக இருந்தாலும், இவற்றில் மிக அழகான மாதிரியையும், இந்த அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை காணமுடியும் என்பதையும் என்னால் காண முடிந்தது. எனது அழமான ஈடுபாட்டினால் இங்கு வருவது தாமதமானது.

இந்த நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பை பெற்ற இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக நான் உள்ளேன். என்னோடு, மிகப்பெரிய இந்திய வர்த்தக பிரதிநிதிகள் குழு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது என்றாலும், அனைவரின் வளர்ச்சி, அனைவரின் ஒருமித்த வளர்ச்சி என்பதே எங்களது மையக் கருத்து என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இதனால், நாம் மட்டுமே முன்னேறக்கூடாது, நம்மோடு பயணிக்கும் மற்றவர்களது முன்னேற்றத்திற்கும் உதவி செய்வதோடு, அவர்களும் நம்மோடு பயணிக்கவேண்டும். இதுவே எங்களது அடிப்படைக் கருத்து.

இங்கு வந்திருக்கும் இந்திய வர்த்தக பேரவையை சேர்ந்தவர்கள் அவர்கள்ருவாண்டாவிற்கு சாதாரணமாக சுற்றுப் பயணம் மேற்கொண்டதாக மட்டும்கருதக்கூடாது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். இன்று ருவாண்டாவிற்கு வருகை தருவது என்பது ஆப்பிரிக்காவின் வாயில்கள் தங்களுக்காக திறந்திருக்கின்றன என்பது பொருள், ஏனென்றால், அதற்கான திறவுகோல் இங்குதான் இருக்கின்றது. ருவாண்டாவின் மாதிரியும் அதன் வளர்ச்சியும் ஆப்பிரிக்க எங்கிலும் பேசப்பட்டு வருகின்றன. ஒரு வகையில் ஆப்பிரிக்கா எங்கிலும் காணப்படும் இந்த புதிய மனோபாவத்திற்கு ருவாண்டா அதிபர் தலைமையேற்றுள்ளார். இந்த நாட்டிற்கான தங்களது வருகை ஒரு நாட்டின் எல்லைகளுக்கு உட்பட்டது அல்ல, இதை நீங்கள் பரிசீலித்தால், பல வாய்ப்புகளையும் காண்பீர்கள். பல சவால்களையும் வாய்ப்புகளையும் அடையாளம் காண்பீர்கள். நீங்கள் இந்த வாய்ப்பை நழுவ விடமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன்.

ருவாண்டா அதிபர் அவர்கள், மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறார் என்பதை நான் நேற்றுமுதல் கவனித்து வருகிறேன். சிறந்த நிர்வாகம், மக்களின் மேம்பாடு மற்றும் முன்னேற்றம், மக்களின் வளம், சமூகத்தில் அமைதி, இவையே அவரது சிந்தனையின் கூறுகளாக உள்ளன. இந்தியர்களாகிய நமக்கு இவை யாவும், சாதகமாக உள்ளன. இவை நமது இயல்புக்கு உகந்தவையாகும்.

இப்படியாகவே இந்த நாடு உள்ளது. உலகத்தின் கவனம் ஆப்பிரிக்கா மீது இல்லாத போது, இந்தியா ஆப்பிரிக்காவிற்கு வர முடிவு செய்தது.

பாருங்கள்! குஜராத்தில் உள்ள ஜோத்பூரை சேர்ந்த ஒரு குடும்பம் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இங்கு வந்திருக்க்க்கூடும் என்று நான் நம்புகிறேன். அன்றுமுதல் இந்தியாவிலிருந்து பலர் இங்கு வந்துள்ளனர், இவர்கள், இங்குள்ள மக்களின் வாழ்க்கையோடு ஒன்றுகலந்துவிட்டனர். நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் இவர்கள், பங்காளிகளாக ஆகியுள்ளனர். தற்போது உலகத்தின் கவனம் இந்த நாட்டின்மீது திரும்பி உள்ளது என்பது உண்மை. ஒட்டுமொத்த உலகமும் இந்த நாட்டிற்கு வரவேண்டும் என்று விரும்புகிறது. எனினும், இநத் நாட்டிற்கு நாம் உண்மையாகவே தேவைப்பட்டபோது, நாம் இங்கு வந்தோம். இன்று அவர்க்ளோடு சேர்ந்து உலகத்தை ஆதரிக்கலாம் என்பதால், அவர்களது வளர்ச்சிக்கு நாம் உதவ விரும்புகிறோம். பின் தங்கியிருப்பவர்களுக்கும், வாய்ப்புகள் கிடைக்காதவர்களுக்கும் ஏதேனும் செய்யவேண்டும் என்று நினைக்கிறோம். உலகத்தை இந்த நோக்கத்தோடுதான் நாம் அணுகுகிறோம். உலகின் மற்ற நாடுகளோடு பயணிக்க விரும்புகிறோம். அவர்களோடு இணைந்து பணி செய்வதன் மூலமாக அந்த நாடுகளின் மக்களின் நலனுக்கு என ஏதேனும் செய்ய விரும்புகிறோம்.

ருவாண்டா அதிபர் அவர்கள், குஜராத்திற்கு வருகை தந்தார். குஜராத்தில் பலவற்றை பார்த்து அவர் புரிந்துகொண்டார். அவர் எப்போது இந்தியாவிற்கு வருகை தந்தாலும், வளர்ச்சி சார்ந்தவற்றின்மீது அவர் தமது கவனத்தை செலுத்தினார். அவரே அவற்றை கண்டு, புரிந்துகொண்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார். வளர்ச்சியை தனது கடப்பாடாக கருதும், ஒருவரின் தலைமையின்கீழ் எந்த பணிக்கும் எவ்வகையான இடையூறு இருக்கமுடியாது என்று நான் நம்புகிறேன். புதியவற்றிற்கான புரிதல் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல், அவரது இயல்பாகும்.

எண்ணற்ற வாய்ப்புகள் இருக்கின்றன. ஒரு சாளரத்தை திறந்தால், நீங்கள் மற்றொரு வாய்ப்பை காண்பீர்கள். இரண்டாவது சாளரத்தை திறந்தால், இன்னும் பிரம்மாண்டமான வாய்ப்பை காண்பீர்கள். தொடர்ந்து பயணித்தீர்களானால், தொடர்ந்து முன்னேறி தொடர்ந்து வெற்றியை காண்பீர்கள். இந்த வாய்ப்புகளை நான் இங்கு தெளிவாக காண்கிறேன். மொத்தத்தில் இந்தியாவிலும் சமமாக வாய்ப்புகள் இருக்கின்றன. ருவாண்டாவ்வில் பல வர்த்தக பெருமக்கள் இருக்கின்றனர். அவர்கள் இந்தியாவில் வளர்ச்சிகாண விரும்பினால், அனைத்து வசதிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது. அவர்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.

எனினும், நான் இங்கு வலியுறுத்த விரும்புவது, உள்கட்டமைப்புஅல்லது ஊரக வளர்ச்சி அல்லது பொருளாதார செயல்பாடு அல்லது சிறுதொழில்களைஅமைப்பது அல்லது அவர்களது உற்பத்திப் பொருட்களுக்கான உலகளாவிய சந்தையைஉருவாக்குவது, எதுவாக இருந்தாலும், இந்திய வர்த்தக சமுதாயம் அவற்றை இணைந்து செயல்படுத்தலாம்.

இந்தியாவில் தயாரிப்பு என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிப்பு என்ற இயக்கத்தை ருவாண்டாவோடு நாம் பகிர்ந்துகொள்ளலாம். அவர்களோடு இணைந்து கொள்ளலாம். சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் மூலமாக பருவநிலை மாற்றம் பற்றிய பிரச்னைகளை சமாளிக்க நாம் ஒன்றாக பயணித்து வருகிறோம். வாழ்க்கையை எளிதாக்கவும், சூரியசக்தியை இதற்கு பயன்படுத்துவதற்கான புரிதலுக்காகவும் ஒரு பெரிய இயக்கம் தொடங்கி உள்ளது. இதற்கு ருவாண்டா மக்கள் முன்வருவார்கள் என்று நான் நம்புகிறேன்.

இன்று ருவாண்டா அதிபரோடு பயணித்துக்கொண்டிருந்தபோது எல்.இ.டி பல்புகளின் பயன்பாடு பற்றி விவாதித்தேன். எல்.இ.டி பல்புகள் காரணமாக இந்தியாவில் நடுத்தர குடும்பங்கள் மிகவும் பயனடைந்து, அவர்கள் செலுத்தும் மின்சார கட்டணம் மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது. ருவாண்டாவில் எல்.இ.டி பல்பு இயக்கம் தொடங்கினால், அது மக்களுக்கு எரிசக்தியை சேமிப்பதோடு, இந்நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும்.

எரிசக்திக்கான தேவை குறைவதால், எரிசக்தி தொழிற்சாலைகள் அமைப்பதற்கான செலவீனமும் குறைகிறது. இன்று வீட்டு பயன்பாட்டிற்கு செலவிடப்படும் எரிசக்தியை சேமிப்பதன்மூலம், அதனை தொழில் துறைக்கு பயன்படுத்த முடியும். எனவே சிறியனவற்றை கொண்டு பெரிய மாற்றத்தை உண்டாக்கலாம். நாம் ஒன்றிணைந்து இந்த இலக்கை நோக்கிப் பணியாற்றலாம். பால்வளத்துறையில் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன என்பதோடு, வெள்ளை புரட்சிக்கான வாய்ப்பும் இருக்கிறது, இதில் இந்தியா சிறந்து விளங்குகிறது. நாம் கைகோர்த்துக்கொண்டு இதில் பணியாற்றலாம். ருவாண்டா நமது நட்பு நாடு. ருவாண்டாவின் வளர்ச்சிக்கு இந்தியாவில் கிராம அளவிலிருந்து தேசிய அளவுவரை உள்ள திறமைகள், இந்திய வர்த்தக சமுதாயத்தின் வலிமை மற்றும் இந்தியத் தொழில்துறைஆகியவற்றைக் கொண்டு, உகாண்டாவின் மேம்பாட்டுக்கு நாம் பயன்படுத்தலாம்.ருவாண்டா நமது நட்புறவு நாடு. இந்த நாட்டை நீங்கள் நெருக்கமாகசெய்வீர்களேயானால், இந்த நாட்டின் கலாச்சாரம் நம் நாட்டுடன் ஒத்திருப்பதைக் காணலாம். எல்லாவற்றிலும் ஒற்றுமை இருப்பதையும் பார்க்க முடியும். இதை நாம் தெளிவாக உணர்ந்திருக்கிறோம். கலாச்சார ஒற்றுமையை இந்த நாட்டிலும் செயல்படுத்தலாம். ஜனநாயகப் பண்புகள், போக்குவரத்து ஆளுமை, அத்துடன் திறமையும், தலைமைப் பண்பும் அதில் சார்ந்திருக்கிறது.