Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ருவாண்டா, கிகாலியில் நடைபெற்ற ஓசோன் மண்டலத்தை பாதுகாப்பதற்கான வியன்னா மாநாட்டின் மாண்ட்ரியல் மரபிற்கான பங்கேற்பாளர்கள் கூட்டத்தில் அரசு எடுத்த பேச்சுவார்த்தை நிலைக்கு அமைச்சரவை ஒப்புதல்


பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, ருவாண்டா, கிகாலியில் 2016, அக்டோபர், 6-14 வரை நடைபெற்ற ஓசோன் மண்டலத்தை பாதுகாப்பதற்கான வியன்னா மாநாட்டின் மாண்ட்ரியல் மரபிற்கான பங்கேற்பாளர்கள் கூட்டத்தில் (எம்.ஓ.பி.) அரசு எடுத்த பேச்சுவார்த்தை நிலைக்கு தனது பின்னேற்பு ஒப்புதலை வழங்கியது.

கிகாலியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், மாண்ட்ரியன் மரபின் கீழான வேதியியல் பொருட்கள் பட்டியலில் ஹைட்ரோஃப்ளோரோ கார்பன்களை (எச்.எப்.சி.க்கள்) சேர்ப்பதையும், அதன் மூலம் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை வரைமுறை செய்திடவும் மற்றும் மாண்ட்ரியல் மரபின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள கூட்டு நிதியின் நிதியுதவியுடன் வருங்காலங்களில் படிப்படியாக முடிவுக்கு கொண்டு வரவும் குறிக்கோளாக கொண்டிருந்தது. எச்.எப்.சி.க்கள் ஓசோனை சிதைக்கச் செய்வது அல்ல, ஆனால் உலகை வெப்பமயமாக்கும் பொருள் ஆகும். அதனை கட்டுப்பத்தினால், உலக வெப்பநிலையை ஒரு அளவில் இருக்க பங்களிப்பதோடு, காலநிலை மாறுதல் தீர்வுகளுக்கு முன்னோடி செயலாக அமையும்.

2024 முதல் 2030 வரை அடுத்தாண்டில் முடிவடையும் எல்லை கொண்ட 3 வழிகளில் சரியான அடிப்படை ஆண்டை ஏற்பதற்கு வாதாடுவதற்கான சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாறுதல் அமைச்சகத்தின் முன்மொழிவிற்கும் அமைச்சரவை ஒப்புதலை வழங்கியது. அரசுடன் கலந்தாலோசித்தபின் முடிவு செய்யப்பட்ட அம்சங்கள் கொண்ட எல்லைகளில் உள்ள தேவைக்கேற்ற வழிகளை தேர்வு செய்யவும் அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியது. கிகாலியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, அடிப்படை ஆண்டுகள் மற்றும் முடிவடையும் ஆண்டுள் ஆகியவற்றை இந்தியா வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட பிரிவுகள், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட குளிர்பதனிகளை பயன்படுத்தி வளர்ச்சி அடையவும் மற்றும் குறைந்த கூடுதல் செலவு மற்றும் அதிகப்படியான காலநிலை பயன்கள் தடையில்லா வளர்ச்சி அடையவும் உறுதி செய்யப்படும்.

கிகாலியில், வளரும் நாடுகளுக்கு இரண்டு விதமான அடிப்படை மற்றும் முக்கிய ஆண்டுகள் இருக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்தியா 2024, 2025, 2026 ஆகியவற்றை அடிப்படை ஆண்டுகளாக கொண்டிருக்கும். இம்முடிவு, 65% கூடுதல் எச்.சி.எப்.சி. படியை இந்தியாவின் அடிப்படை பயன்பாடு மற்றும் உற்பத்திக்கும் அளிக்கும். 2024/2025-ல் தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ளப்படும் என்ற நிபந்தனையுடன், 2028 இந்தியாவிற்கு முடிவுறும் ஆண்டாக இருப்பதோடு, ஒப்புக் கொள்ளப்பட்டதற்கு அதிகமாக குளிர்பதனிகளை பயன்படுத்தி வளர்ச்சியடைந்திருந்தால், இந்தியா தனது முடிவுறும் காலத்தை 2030 வரை கொண்டிருக்கும். மறுபுறம், வளர்ச்சியடைந்த நாடுகள் எச்.எப்.எசி.க்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை 70%- அளவிற்கு 2029க்கு குறைக்கும். கிகாலியில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, 2032-ல் 10%, 2037-ல் 20%, 2042-ல் 30% மற்றும் 2047-ல் 85% என இந்தியா 2032 முதல், 4 நிலைகளில் தனது முடிவை நிறைவு செய்யும்,

முதன்முறையாக,, மாண்ட்ரியல் மரபில் செய்யப்பட்டுள்ள கிகாலி திருத்தங்கள், புதிய குளிர்பதனி மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் ஆற்றல் திறன் மேம்பாடைய ஊக்குவிக்கும். நிதி மீதான ஒப்புக்கொள்ளப்பட்ட முடிவுகளில், வளரும் நாடுகளில், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மற்றும் சேவை பிரிவிற்கு நிதியுதவி அளிப்பது சேர்க்கப்பட்டுள்ளது.


*****