பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ரூ.37,500 கோடி நிதி ஒதுக்கீட்டில் மேற்பரப்பு நிலக்கரி/ பழுப்பு நிலக்கரி வாயுவாக்கலை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டம், இந்தியாவின் நிலக்கரி / பழுப்பு நிலக்கரி வாயுவாக்கலை விரைவுபடுத்துவதற்கும், 2030-ம் ஆண்டுக்குள் 100 மில்லியன் டன் நிலக்கரியை வாயுவாக்கும் தேசிய இலக்கை அடைவதற்கும், எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், யூரியா, அமோனியா, மெத்தனால் போன்ற முக்கியப் பொருட்களின் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் உதவும்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
சுமார் 75 மில்லியன் டன் நிலக்கரி / பழுப்பு நிலக்கரியை வாயுவாக்கும் இலக்குடன், புதிய மேற்பரப்பு நிலக்கரி / பழுப்பு நிலக்கரி வாயுவாக்கல் திட்டங்களை ஊக்குவிப்பதற்கு ரூ.37,500 கோடி மொத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* ஆலை, இயந்திரங்கள் ஆகியவற்றுக்கான செலவில் அதிகபட்சமாக 20% வரை நிதி ஊக்கத்தொகை வழங்கப்படும்.
* திட்டச் செலவு, நிலக்கரி உள்ளீடு, செயற்கை எரிவாயு வெளியீடு ஆகியவற்றை அளவுகோலாகக் கொண்ட ஒரு மதிப்பீட்டுக் கட்டமைப்புடன், வெளிப்படையான, போட்டித்தன்மை வாய்ந்த ஏல செயல்முறையின் மூலம் தேர்வு நடைபெறும்.
* இத்திட்டத்தின் மூலம் நிலக்கரி வளம் நிறைந்த பகுதிகளில் உள்ள 25 திட்டங்களில் சுமார் 50,000 நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* இத்திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள 75 மில்லியன் டன் நிலக்கரி/பழுப்பு நிலக்கரி வாயுவாக்கத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.6,300 கோடி வருவாய் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260621®=3&lang=1
—-
SS/PLM/EA
The scheme for Promotion of Surface Coal/Lignite Gasification Projects that has been cleared by the Cabinet will further energy security, boost investment and create job opportunities for the youth. It will add strength to our efforts to strengthen the tech and innovation system…
— Narendra Modi (@narendramodi) May 13, 2026