பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி, ரோஷ் ஹஷானா எனப்படும் யூதப் புத்தாண்டுப் பண்டிகையை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நேதன்யாகு, இஸ்ரேல் மக்கள், உலகெங்கிலும் உள்ள யூதர்கள் ஆகியோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் அமைதி, நம்பிக்கை, நல்ல ஆரோக்கியம், தொடர்ச்சியான முன்னேற்றம் ஆகியவற்றால் நிறைந்திருக்க வேண்டும் என்று பிரதமர் வாழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஷானா டோவா!
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, இஸ்ரேல் மக்கள், உலகெங்கிலும் உள்ள யூத சமூகங்கள் ஆகியோருக்கு மிகவும் மகிழ்ச்சியான ரோஷ் ஹஷானா வாழ்த்துகள்.
இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் அமைதி, நம்பிக்கை, நல்ல ஆரோக்கியம், தொடர்ச்சியான முன்னேற்றம் ஆகியவற்றால் நிறைந்திருக்கட்டும்.”
(Release ID: 2309433)
****
TV/PLM/SH
Shana Tova!
— Narendra Modi (@narendramodi) September 12, 2026
Wishing a very happy Rosh Hashanah to Prime Minister Netanyahu, the people of Israel and Jewish communities across the globe.
May the new year be filled with peace, hope, good health and continued progress for all.
שנה טובה!
מאחל שנה טובה ושמחה לראש הממשלה…