Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லக்னோவில் நடந்த ஈ-ரிக்ஷா வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டார் – ரிக்ஷா தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் உரையாடினார்.

லக்னோவில் நடந்த ஈ-ரிக்ஷா வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டார் – ரிக்ஷா தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் உரையாடினார்.


பாரதீய சிறு கடன் வழங்கும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஈ-ரிக்ஷா வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டார்.

பொது இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் ரிக்ஷா தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார். இந்த உரையாடலின்போது, கூடுதல் வருமானத்தில் ஒரு பகுதியை சேமிப்பது, குழந்தைகளின் கல்விக்கு செலவிடுவது ஆகியவை குறித்து விவாதம் நடந்தது.

அந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தியா வளர்ந்து வரும் பொருளாதாரம் என்பதை உலகம் ஏற்றுக் கொண்டது என்று கூறினார். உலகப் பொருளாதாரம் மந்தமாக உள்ள நிலையிலும் இது நடைபெறுகிறது என்று குறிப்பிட்டார். ஏழைகளின் நலன் மற்றும் இளைஞர்களின் வேலை வாய்ப்பே அரசின் பிரதான நோக்கம் என்றார் பிரதமர். இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக அல்லாமல், வாய்ப்பை அளிப்பவர்களாக மாற வேண்டும் என்றார் பிரதமர். இது தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தள்ளது என்றார் பிரதமர். பிரதம மந்திரி முத்ரா வங்கி திட்டத்தின் கீழ், இது வரை 2 கோடி மக்கள் பயன்பெற்றுள்ளனர் என்றார். இத்திட்டம் தொடங்கப்பட்டு ஒரே வருடத்துக்குள் இந்த சாதனை செய்யப்பட்டுள்ளது என்றார்.

இன்று ஈ-ரிக்ஷா பெரும் மக்கள், சாதாரண ரிக்ஷாவிலிருந்து ஈ-ரிக்ஷாவுக்கு மாறவில்லை. இது ஒரு முக்கியமான மாறுதல் என்றார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு, பிரதமர் ரூபே அட்டைகளையும், சமூக பாதுகாப்பு திட்டங்களையும் வழங்கினார். 2100 ஈ-ரிக்ஷாக்களின் அணிவகுப்பை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

***