பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, லக்னோ மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. முதல் பகுதி 22.878 கிலோ மீட்டர்கள் தூரத்தையும், 22 ரயில் நிலையங்களையும் கொண்டதாக இருக்கும்.
இத்திட்டத்துக்கான மொத்த செலவு 6926 கோடி ரூபாய். இத்திட்டத்துக்கு மத்திய அரசு 1,300 கோடி ரூபாயை பங்கு கடன் மூலமாக வழங்கி உதவி செய்யும். இந்த திட்டம், லக்னோ மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும். இந்நிறுவனத்தில் மத்திய அரசும், உத்திரப்பிரதேச அரசும் சமமான பங்குதாரர்களாக இருப்பர்.
மொத்தம் உள்ள 22.878 கிலோ மீட்டர் தூரத்தில், 19.438 கிலோ மீட்டர்கள் தரையிலிருந்து உயரத்திலும், 3.440 கிலோ மீட்டர் தூரம், பூமிக்கு அடியிலும் இருக்கும். 19 உயர்ந்த நிலையங்களும், 3 நிலையங்கள் பூமிக்கு அடியிலும் அமைந்திருக்கும். இந்த மெட்ரோ ரயில், சவுத்ரி சரண் சிங் விமான நிலையம் முதல் மூன்ஷி புலியா வரை செல்லும்.
இத்திட்டம், மெட்ரோ ரயில்வே (கட்டுமான) சட்டம் 1978 மற்றும் மெட்ரோ ரயில்வே (செயல்பாடு மற்றும் பராமரிப்பு) சட்டம் 2002 மற்றும் ரயில்வே சட்டம் 1989ன் கீழ், அவ்வப்போதைய திருத்தங்களுடன் வரும்.
பின்னணி :
லக்னோ நகரம், அதன் போக்குவரத்து உட்கட்டமைப்பு காரணமாக ஏராளமான அழுத்தங்களை சந்தித்து வருகிறது. லக்னோ கடந்த இருபது ஆண்டுகளில் பெரும் வளர்ச்சியை சந்தித்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, லக்னோ நகரத்தின் வளர்ச்சி 29 லட்சமாகும். லக்னோ மெட்ரோபாலிட்டன் இடத்தின் மக்கள் தொகை 50 லட்சமாகும். இந்நகரத்தில் மொத்தம உள்ள 14.24 லட்சம் வாகனங்களில் 80 சதவிகிதம் இரு சக்கர வாகனங்களாகும். மீதம் உள்ள 14 சதவிகிதம் கார்களாகும். வாகன வளர்ச்சியில் இந்நகரம் ஆண்டுக்கு 8.35 வளர்ச்சி அடைந்து வருகிறது.