Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லிச்சென்ஸ்டீன் பரம்பரை இளவரசர் திரு அலோயிசின் இந்தியப் பயணம்

லிச்சென்ஸ்டீன் பரம்பரை இளவரசர் திரு அலோயிசின் இந்தியப் பயணம்


புதுதில்லியில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு தாக்கம் குறித்த உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், லிச்சென்ஸ்டீன் பரம்பரை இளவரசர் திரு அலோயிஸ் இந்தியா வந்துள்ளார். 

இந்த உச்சிமாநாட்டிற்கு இடையே, இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள இளவரசர் திரு அலோயிஸுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  இந்தியா – லிச்சென்ஸ்டீன் நாடுகளிடையே சுமூகமான இருதரப்பு நட்புறவை வலுப்படுத்துவது குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர்.

2025-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியா-கானா  (தலைநகர் டெபா) இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதை இருதலைவர்களும் வரவேற்றுள்ளனர். இந்த வர்த்தக ஒப்பந்தம், இருநாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உத்வேகம் அளித்திடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் நூறு பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான முதலீடுகளை ஈர்ப்பதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்யும் என்று இருதலைவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர். உயர் மதிப்பிலான உற்பத்தி, மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் புத்தாக்கம் சார்ந்த துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது என இருநாடுகளின் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

***

(Release ID: 2230715)

TV/SV/RJ/RK