Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வங்கதேசத்தில் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துவதற்கு மூன்றாவதாக 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் அளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


வங்கதேசத்தில் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துவதற்கு மூன்றாவதாக 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் அளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு (MoU) பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. செயல்பாட்டுக்குப் பிந்தைய ஒப்புதலாக இது அளிக்கப்பட்டது.

வங்கதேச பிரதமர் ஏப்ரல் 2017ல் இந்தியாவுக்கு வருகை தந்தபோது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

வங்கதேசத்தில் முக்கியத்துவமான பங்கேற்பு, கட்டமைப்பு மேம்பாடு, இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே தொடர்பை மேம்படுத்துவதை தீவிரப்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது. அதன் மூலம் நமது வடக்கு பிராந்தியத்துக்கான தொடர்பை மேம்படுத்துவதுடன், வங்கதேசத்தில் இந்திய நிறுவனங்களுக்கு வணிகத்துக்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும்.

வங்கதேசத்துக்கான சலுகையுடன் கூடிய நிதியளிப்பு, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தி, இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே வளர்ச்சியில் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும்.

வங்கதேசத்துக்கான சலுகையுடன் கூடிய நிதியளிப்பு மூலமாக எடுத்துக் கொள்ளப்படக் கூடிய திட்டங்களின் பட்டியலை MoU விவரிக்கிறது. இந்த கடன் ஒப்புதலின் மூலமாக, இந்தியாவின் நலன் சார்ந்த திட்டங்கள் எடுத்துக் கொள்ளப்படுவதை உறுதி செய்ய இது வாய்ப்பளிக்கிறது.

பிரதானப் பகுதிக்கும் இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்துக்கும் இடையிலும், வெளியுலகப் பகுதிக்கும் நல்ல மற்றும் வேகமான தொடர்பு வசதியை அளிப்பதாக சில திட்டங்கள் உள்ளன. இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் அவை இருக்கும். இந்திய நிறுவனங்களுக்கு வணிக வாய்ப்புகளுக்கான கதவைத் திறப்பதாகவும் அவை இருக்கும்.

****