பி.எம்.இந்தியா
கோவிட் – 19 அவசர கால பயன்பாட்டு நிதியத்துக்கு பங்களிப்பு செய்தமைக்காக, வங்கதேச பிரதமர் திருமதி ஷேக் ஹசீனாவுக்கு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
“கோவிட் – 19 அவசர கால பயன்பாட்டு நிதியத்துக்கு 1.5 மில்லியன் டாலர் பங்களிப்பு செய்திருப்பதற்குப் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய உறுதிப்பாடு மற்றும் ஒன்றுபட்ட செயல்பாட்டால், கோவிட் – 19 உருவாக்கியுள்ள சவால்களை நாம் வெற்றிகொள்வோம்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
Grateful to Prime Minister Sheikh Hasina of Bangladesh for announcing $ 1.5 million as contribution to the COVID-19 Emergency Fund. Through our solidarity and working together, we will overcome challenges posed by COVID-19.
— Narendra Modi (@narendramodi) March 23, 2020