Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வடகிழக்கு பகுதியில் புற்றுநோய் சிகிச்சைக்கான வசதிகளை மேம்படுத்துதல்


பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையின் கூடிய மத்திய அமைச்சரவை கீழ்க்கண்டவற்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளது:

 (i)      குவஹாத்தி, டாக்டர்.பீ.போரா புற்றுநோய் மருத்துவமனையை அணுசக்தித் துறை ஏற்று நடத்துதல் மற்றும் அதன் நிர்வாக கட்டுப்பாட்டை, அணுசக்தித் துறையின் உதவி பெறும் டாடா நினைவு மருத்துவமனையின் கீழ் கொண்டு வருதல்;

 (ii)      மருத்துவம், துணை மருத்துவம் மற்றும் உதவி நிலைகளில் 166 பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கி மேம்படுத்துதல்.

 

            வடகிழக்கு பகுதியில் புற்றுநோய் அதிகரித்து வருவதாலும், குறைவான சிகிச்சை வசதிகள் உள்ளதாலும் மற்றும் மேற்கொண்டு ஆராய்ச்சி செய்வதற்கான மருத்துவமனையின் தேவையினாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

      இந்நிறுவனத்தை வலுப்படுத்துவதற்கு தொடரா செலவினம் சுமார் ரூ.150 கோடியாகவும், வருடாந்திர தொடர் செலவினம் ரூ.45-50 கோடியாகவும் இருக்கும்.

 பின்னணி:

 புற்றுநோய்க்கான விசாரணை, கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிப்பதை நோக்கமாக கொண்டு, இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் தொண்டு நிறுவனம் மூலம் கவுகாத்தியில், 1974ம் ஆண்டு போரா புற்றுநோய் மருத்துவமனை துவங்கப்பட்டது. 1986-ம் ஆண்டு இம்மருத்துவமனையை, அதன் சொத்து மற்றும் கடன்களுடன் அசாம் அரசு ஏற்றுக்கொண்டு, அதன் நிர்வாகத்திற்காக அணுசக்தித் துறை மற்றும் வடகிழக்கு மன்றத்துடன் முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. இம்மருத்துவமனை, தற்போது 8 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் உள்ளிட்ட 209 படுக்கைகளை கொண்டுள்ளது.

 அணுசக்தித் துறையின் கீழ் செயல்படும் டாடா நினைவு மருத்துவமனை புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைத் துறையின் முதன்மை ஆராய்ச்சி நிறுவனமாகும். 1989-ம் ஆண்டு முதல், டாடா நினைவு மருத்துவமனை, அணுசக்தித் துறையின் மூலம் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியை பெற்று வருகிறது. 2013 அக்டோபர் மாதம், அசாம் மாநில முதல்வர், இம்மருத்துவமனையை, ஒட்டுமொத்த வடகிழக்கு பகுதிக்கான புற்றுநோய் சிகிச்சை, கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான சிறப்பு மையமாக உருவாக்கிட அணுசக்தித் துறை ஏற்று நடத்திட வேண்டும் என்று முன்மொழிந்தார்.

 

****