Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வடகிழக்கு மன்றக் கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

வடகிழக்கு மன்றக் கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை



இந்த வடகிழக்கு மன்றக் கூட்டுக்கூட்டத்தில் கலந்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். நேற்றைய கூட்டத்தின் கலந்துரையாடலும், இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலும் இப்பிராந்தியத்தின் விரைவான வளர்ச்சிக்கு உதவும் என நான் நம்புகிறேன்.

வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு, வடகிழக்கு மன்றம் உதவுவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். இது இப்பிராந்தியத்தில் பல்வேறு நிறுவனங்கள் நிறுவுவதற்கும், பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்ளவும் காரணமாக உள்ளது.

வடகிழக்கு மேலவை 1972-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அது முதல் வடகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது. மக்களது எதிர்பார்பினை நிறைவேற்றும் வகையில், வடகிழக்கு மேலவை தங்கள் குறிக்கோள்கள் எந்த அளவு எட்டப்பட்டது என்பது குறித்து தங்களை தாங்களே சுயபரிசோதனை செய்வது முக்கியமாகும். வடகிழக்கு மேலவையை புத்தாக்கம் மற்றும் தரம் உயர்த்துவது தேவையாக இருக்கக் கூடும். தேவையான வளஆதாரங்கள், அறிவு மற்றும் திறன்களுடன் வடகிழக்கு மேலவையை, வடகிழக்கு மாநிலங்களின் நவீன வளஆதார மையமாக உருவாக்க நீங்கள் விரும்புவீர்கள். இந்த வளஆதார அமையம் மாநிலங்கள் மற்றும் செயல்படுத்தும் முகமைகள் முறையாக திட்டமிட்டு திட்டங்களை செயல்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்த மற்றும் இப்பிராந்தியத்திற்கான முக்கிய கொள்கைத் திட்டங்களை வகுக்கும்.

வடகிழக்கு மேலவை, சிறப்பு வல்லுநர்களை தாமாகவோ அல்லது முகமையின் மூலமாகவோ உருவாக்கி, அதன் மூலம் மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகம் தங்கள் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் உதவும். இது இப்பிராந்தியத்தில் நல்லாட்சி மற்றும் சிறந்த முறைகளை உருவாக்க முனையும். வடகிழக்கு சபை, வாழ்வாதாரம், தொழில்துவங்குதல், நிதிஆதாரங்கள், புதிதாக துவங்கள் மற்றும் திறன் வளர்ச்சி போன்ற பிரிவுகளிலும் தமது கவனத்தை செலுத்தும். இவை அனைத்து வேலைவாய்ப்பினை உருவாக்க உதவும்.

அரசு வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சியை தமது “செயல் கிழக்கு கொள்கை” (Act East Policy) மூலம் கவனம் செலுத்துகிறது. இக்கொள்கையின் ஒரு பகுதியாக, நாங்கள் தனிமையாக உள்ள இப்பிராந்தியத்தின் தனிமையை குறைக்கும் வகையில், சாலை, ரயில், தொலைதொடர்பு, மின்சாரம் மற்றும் நீர்வழித் துறைகளை வளப்படுத்தி, அதன் மூலம் ஒட்டுமொத்தமான வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறோம்.

நாட்டின் மேற்குப் பிராந்தியம் வளர்ச்சியடையும்போது, நாட்டின் பிற பிராந்தியங்களும் வளர்ச்சியடையும். நான் வடகிழக்கு பிராந்தியம் வளர்ச்சியடையாது என்பதற்கான எந்த காரணத்தையும் காணவில்லை. நான் வடகிழக்கு பிராந்தியம் உட்பட அனைத்து பிராந்தியங்களும் வளர்ச்சியடைந்தால்தான் இந்தியா முன்னேறும் என்பதை நம்புகிறேன். பல முக்கிய காரணங்களுக்காக வடகிழக்கு பிராந்தியம் எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். இப் பிராந்தியம் நாட்டின் பிற வளர்ச்சியடைந்த பிராந்தியங்களுக்கு நிகராக கொண்டு வரவேண்டும் என்பது எனது குறிக்கோளாகும்.

நடப்பு வரவு-செலவுத் திட்டத்தில், வடகிழக்கு பிராந்தியத்திற்கென ரூ.30,000 கோடி ஒதுக்கப்பட்டுள்து. நாம் இந்நிதியை நல்ல முறையில் பயன்படுத்தி இப்பிராந்தியத்தை வளர்ச்சியடைய செய்வது நமது கடமையாகும்.

நாம் கூட்டுறவு மற்றும் போட்டி அரசியலை நம்புகிறோம். வலுவான மற்றும் மேலும் வளர்ச்சியடைய விரும்பும் மாநிலங்களுக்கு போதுமான அதிகாரம் மற்றும் ஆதாரவளங்கள் அளிப்பது தேவையாகும். வலு குறைவாக உள்ள மாநிலங்களுக்கு, தேவையான உதவிகள் அளிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக, முதலமைச்சர்கள் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், நாங்கள் மத்திய திட்டங்களுக்கு 90:10 என்ற விகிதத்திலும், பிறத் திட்டங்களுக்கு 80-20 என்ற விகிதத்திலும் உதவிட முடிவு செய்துள்ளோம்.

கடந்த காலத்தில், அசாமில் இரண்டு முக்கிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் – பிரம்மபுத்ரா கிராக்கர் மற்றும் பாலிமர் லிமிடெட் மற்றும் நுமாலிகர் ரிஃபைனரி லிமிடெட்டின் மெகுதி பிரிவு. வடகிழக்கு பிராந்தியத்தில் இவை மிகப் பெரிய அளவில் வேலைவாய்ப்பினை உருவாக்கும். எனினும், இவைகளை நிறைவேற்ற பல ஆண்டுகள் தேவைப்பட்டன. நாம் நமது திட்டங்களை குறித்த நேரத்திற்குள்ளாகவும், மதிப்பீடுகளுக்கு மேலாக செலவு செய்யாமல் நிறைவேற்றுவதை உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் நாம் இத்திட்டங்களின் உண்மையான பலன்களை பெற இயலும்.

தெற்காசியவிற்கு வடகிழக்கு தான் நுழைவாயில் என்பதால் அதன் நன்மையை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் நமது அண்டை நாடுகளோடு சாலை மற்றும் ரயில் இணைப்புகளை திறக்க உள்ளோம். இது இப்பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும்.

வடகிழக்கிற்காக நாங்கள் சிறப்பு நெடுஞ்சாலைகள் கட்டமைப்பு முகமையினை உருவாக்கியுள்ளோம் – தேசிய நெடுஞ்சாலை மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம் – 2014, ஜூலை 14 அன்று பதிவுசெய்துள்ளோம். அது முதல், அது தனக்கென கிளை அலுவலகங்களை, ஒவ்வொரு வடகிழக்கு மாநிலங்களிலும் ஒன்று என்ற அளவில் நிறுவியுள்ளது. அது வடகிழக்கு மாநிலங்களில், ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் 1001 கிலோ மீட்டர் சாலைகளை 34 திட்டங்களில் செயல்படுத்த உள்ளது.

சாலைத் துறையில், இப்பகுதியில் நிலவும் சிறப்பு நில மற்றும் தட்பவெட்ப நிலைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். பெரும்பான்மையான வடகிழக்கு பகுதிகள் அதிகளவிலான மழையை பெற்று இயற்கை பேரழிவுகள் மற்றும் நிலச்சரிவுகளுக்கு உள்ளாகின்றன. ஆகவே நாம் இப்பகுதியில் சாலை அமைக்கும்போது சரியான தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும்.

சமீபத்தில், வங்காளதேச உதவியுடன் வடகிழக்கு பிராந்தியத்திற்கென மேம்படுத்தப்பட்ட இணைய தொடர்புத் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளோம். இது இப்பிராந்தியத்திற்கு 10 ஜி.பி. தடையற்ற மாற்று அலைவரிசை கிடைக்க உதவும்.

அனைத்து எட்டு வடகிழக்கு மாநிலங்களுக்கும் மின்சார கொண்டு செல்லும் திட்டத்திற்காக ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் அதிகமான முதலீடு அரசு செய்துள்ளது. இது அதிக பகுதிகள் மின்சாரம் பெற உதவும். சமீபத்தில் துவக்கி வைக்கப்பட்ட பிஷ்வாநாத்-சாரியாலி-ஆக்ரா மின்சாரம் கொண்டு செல்லும் பாதையின் மூலம் இப்பகுதிக்கு கூடுதலாக 500 மெகா வாட் கிடைக்கும்.

இப்பகுதியில் ரயில்வே துறை ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் பெரும் விரிவாக்க பணியை மேற்கொண்டு வருகிறது. 2014, நவம்பரில். அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயா ஆகியவை ரயில்வே வரைபடத்தில் கொண்டு வரப்பட்டன. திரிபூராவில் உள்ள அகர்தலா அகலபாதையால் இணைக்கப்பட்டுள்ளது. நாங்கள் அனைத்து வடகிழக்கு மாநிலங்களையும் ரயில்வே வரைபடத்தில் கொண்டு வர முயல்கிறோம்.

வடகிழக்கில், இந்திய ரயில்வே கடந்த இரண்டு ஆண்டுகளில் 900 கிலோ மீட்டர்களில் அகலபாதையை துவக்கியுள்ளதோடு, மீதம் உள்ள 50 கிலோ மீட்டர்கள் குறுகிய பாதை 2016-17-ல் மாற்றும். இது தவிர, வடகிழக்கு பிராந்தியத்திற்கு 132 கிலோ மீட்டர்கள் கொண்ட மூன்றாவது மாற்றுப் பாதை (அதாவது நியு மேனாகுரி-ஜோகிகோபா) துவங்கப்பட உள்ளது.

வடகிழக்கு பல்வேறு சக்திகளை கொண்டுள்ளது. அதனை அப்பகுதியின் நல்வளர்ச்சிக்காக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து வடகிழக்கு பிராந்தியங்களும் அழகிய இயற்க்கை சூழலையும், உயரிய வரலாற்று, கலாச்சார மற்றும் பழமையான பாரம்பரியத்தையும் கொண்டுள்ளது. இவை அனைத்தும் இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த பெரிதும் உதவும். மேலும் இப்பிராந்தியம், மலையேற்றம், நடைபயணம் மற்றும் சாகச சுற்றுலாவிற்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்து. அவற்றை நல்ல முறையில் வளர்த்து ஊக்குவித்தால், அவை இப்பிராந்தியத்திற்கு நல்ல வேலைவாய்ப்பினை அளிக்கும். அது இப்பபிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் வருமானத்திற்கு கூடுதலாக உதவும்.

சுற்றுலாத் துறை வடகிழக்கு பிராந்தியத்திற்கென தனிப்பட்ட திட்டத்தினை கண்டறிந்துள்ளதாக நான் அறிகிறேன். வடகிழக்கு மாநிலங்கள் அத்திட்டத்தினை நல்ல முறையில் பயன்படுத்தி சுற்றுலாத் தளங்களை மேம்படுத்தி, உலகெங்கிலும் சுற்றுலா செல்வோரை ஈர்க்கச் செய்வார்கள் என நான் நம்புகிறேன். இப்பிராந்தியம் தங்களது அண்டை நாடுகளில் உள்ள சில புகழ்பெற்ற தலங்களையும் இணைத்து சுற்றுலாத் திட்டங்களை உருவாக்க வேண்டும். இது சுற்றுலா வருபவர்களை கூடுதலாக கவரும்.

வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பெரும்பான்மையான இளைஞர்கள் ஆங்கிலம் பேசக்கூடியவர்களாக உள்ளனர். மேம்படுத்தப்பட்ட இணைய வசதி மற்றும் மொழித் திறன் மூலம், இப்பிராந்தியத்தில் பி.பீ.ஓ. தொழிலை அமைக்கலாம்.

அரசு, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக, வடகிழக்கு பி.பீ.ஓ. ஊக்குவித்தல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் இவ்வசதிகளை பயன்படுத்தி, தங்களது மாநிலங்களில் இந்த பி.பீ.ஓ.-க்களை செயல்படுத்த வேண்டும். இது வளர்ச்சிக்கும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினையும் ஊக்குவிக்கும்.

வடகிழக்கு, சுவையான பழங்கள், மலர்கள், காய்கறிகள், வாசனை செடிகள் மற்றும் மூலிகைகளுக்கு தாயகம் ஆகும். அவை அனைத்தும் இயற்கையாகவே விளையக் கூடியவை. நாம் இயற்கை விவசாய வளர்ச்சிக்கு கவனம் செலுத்தினால், அது இப்பிராந்தியத்திற்கு பெருமளவு உதவும்.

சில மாதங்களுக்கு முன்பாக, நான் சிக்கிம் சென்று, விழாவில் கலந்துக்கொண்டு சிக்கிம், நாட்டின் முதல் இயற்கை விவசாய மாநிலம் என அறிவித்தேன். பிற மாநிலங்கள் சிக்கிம்-மை ஒரு முதன்மையாக கொள்ளும். வடகிழக்கு சபை இப்பிராந்தியத்தில் இயற்கை விவசாய வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்ற வேண்டும். வடகிழக்கு, நாட்டின் இயற்கை உணவுத் தொட்டியாக மாற வேண்டும். இயற்கை உணவு பொருட்களின் உபயோகம் பெருமளவில் உயர உள்ளது. வடகிழக்கு சபை, இப்பிராந்தியத்தில் உள்ள மாநிங்களுக்கு உதவினால், அது இப்பிராந்தியத்திற்கும் மற்றும் மக்களுக்கும் வருமானம் உயர முக்கிய பங்கு அளிக்கும்.

வடகிழக்கு பிராந்தியத்தில் அதிகளவு மக்கள் ஊரகப் பகுதிகளில் உள்ளனர். அசாம்-ல் மட்டும், 86% மக்கள் ஊரகப் பகுதிகளில் வாழ்கின்றனர். நாங்கள் ஷியாமா பிரசாத் முகர்ஜி இயக்கம் மூலம், தொகுதியாகக் கொண்டு, ஊரகப் பகுதிகளில் பொருளாதாரம், சமூக மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த உள்ளோம். ஊரகப் பகுதிகளின் வளர்ச்சிக்காக இந்த இயக்கத்தினை பயன்படுத்திக் கொள்வது இப்பிராந்தியத்தில் உள்ள மாநிலங்கள் கடமையாக கொள்ள வேண்டும்.

இறுதியில், ஷில்லாங்கில் இந்த கூட்டுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தியதற்காக வடகிழக்கு மேலவையின் பெருந்தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,

இக்கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக மேகலாயா ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு எனது சிறப்பான நன்றிகள். இக்கூட்டத்தின் கலந்துரையாடல்கள் இப்பிராந்தியத்தின் வளர்ச்சியை சரியான பாதையில் கொண்டு செல்ல உதவும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

நன்றி