பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை குவஹாத்திக்கு விஜயம் செய்கிறார்.
அங்கு நிலவும் வெள்ள நிலவரம் குறித்த உயர்மட்ட அளவிலான பல்வேறு கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்குகிறார். வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் வெள்ள நிலவரம் மற்றும் அங்கு மேற்கொள்ளப்படும் நிவாரணப்பணிகள் குறித்து அவர் ஆய்வு நடத்துகிறார். குறிப்பாக அசாம், அருணாசல பிரதேசம், நாகாலாந்து மற்றும் மணிப்பூர் ஆகிய மாநில வெள்ள நிலவரங்கள் குறித்து அவர் ஆய்வு மேற்கொள்கிறார்.
இந்த மாநிலங்களின் முதல் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் இந்த கூட்டங்களில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
****
Tomorrow, PM @narendramodi will be in Assam, where he will review the situation arising due to floods and the relief work.
— PMO India (@PMOIndia) July 31, 2017
During his visit, PM will meet CMs & top officials of Arunachal Pradesh, Assam, Manipur, Mizoram and Nagaland to review the flood situation.
— PMO India (@PMOIndia) July 31, 2017