பி.எம்.இந்தியா
வதோதரா விமான நிலைய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத் திறப்பு
சமூக அதிகாரமளித்தலுக்கான முகாமிற்கு
உதவிகள், உபகரணங்கள் வழங்கினார்
குஜராத் மாநிலம் வதோதரா விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த முனையத்தின் கட்டடத்தைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி சனிக்கிழமை (அக். 22) திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், விமானப் போக்குவரத்து சேவை இணைப்பு மிகவும் அவசியமானது என்றும் குறிப்பாக நாட்டின் பொருளாதார, சுற்றுலாத் துறைகளில் மிகவும் இன்றியமையாதது என்றும் கூறினார். விமானப் போக்குவரத்தின் வளர்ச்சி, எதிர்காலப் போக்கு ஆகியவற்றைக் கொண்ட விமானப் போக்குவரத்துக் கொள்கையைக் கொண்டுவந்துள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
நாட்டிலேயே கொச்சி விமான நிலையத்தை அடுத்து, சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத இரண்டாவது விமான நிலையமாக வதோதரா விமான நிலையம் திகழ்கிறது என்று பிரதமர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியை முன்னிட்டு, ஊனமுற்றோருக்கு கருவிகளையும் உபகரணங்களையும் வழங்கிய பிறகு பேசிய பிரதமர், புதிதாக ஏதாவது கருவி அல்லது கட்டமைப்பை உருவாக்கும்போது, ஊனமுற்றோரை மனத்தில் கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அரசு கொண்டுவரும் நலத் திட்டங்கள், ஆக்கபூர்வ செயல்களின் பலன்கள் உரிய பயனீட்டாளர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதே மத்திய அரசின் தலையாய முன்னுரிமை அளிக்கிறது என்றார் அவர். தலித்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் அளிக்கப்படும் ஆக்கபூர்வ செயல்கள் தான் மத்திய அரசின் செயல்பாட்டில் மையப் பொருளாக இருக்கிறது என்றார் அவர்.
வறுமை, போதிய கல்வியறிவின்மை, சுகாதார வாழ்வு ஆகிய எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்க வளர்ச்சி ஒன்றுதான் ஆதாரமாக இருக்கிறது என்றார்.
******
A great gift for the citizens of Vadodara…the new terminal building is a big boost to the city’s infrastructure. pic.twitter.com/mdZcNbwyzn
— Narendra Modi (@narendramodi) October 22, 2016
Aviation sector’s growth will bring more tourists to India, which means more economic opportunities for citizens. https://t.co/78aMS8mW41
— Narendra Modi (@narendramodi) October 22, 2016
Always special to spend time with my Divyang sisters and brothers. Meeting their families was also very humbling & inspiring. pic.twitter.com/J14scFRCgq
— Narendra Modi (@narendramodi) October 22, 2016
Be it timely distribution of equipment, job opportunities & focus on accessibility, talked about initiatives of NDA Govt for Divyang welfare
— Narendra Modi (@narendramodi) October 22, 2016
Let us ensure that every infrastructure we create is sensitive to the requirements of Divyang sisters & brothers. https://t.co/VJv6ZBnWaU
— Narendra Modi (@narendramodi) October 22, 2016