Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வருமான ஆதரவையும் நீண்ட கால கிராமப்புற உற்பத்தித்திறனையும் விபி-ஜி ராம் ஜி சட்டம் எவ்வாறு மேற்கொள்கிறது என்பது குறித்த ஒரு கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று, வருமான ஆதரவு, சொத்து உருவாக்கம், விவசாய நிலைத்தன்மை மற்றும் நீண்ட கால கிராமப்புற உற்பத்தித்திறன் ஆகியவற்றை ஒரு சமரசமாக அல்லாமல், ஒரு தொடர்ச்சியாக, வளர்ச்சியடைந்த பாரதம் –ஜி ராம் ஜி சட்டம்  எவ்வாறு மேற்கொள்கிறது  என்பது குறித்து மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் எழுதிய ஒரு கட்டுரையைப் பகிர்ந்துள்ளார்.

“இந்த மசோதாவிற்கு முன்பு மாநில அரசுகளுடன் விரிவான ஆலோசனைகள், தொழில்நுட்பப் பயிலரங்குகள் மற்றும் பல தரப்பினருடனான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன என்பதை அவர் குறிப்பிடுகிறார்,” என்று திரு மோடி கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் இட்ட ஒரு பதிவிற்குப் பதிலளிக்கும் விதமாக,  சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  திரு. மோடி கூறியிருப்பதாவது:

“இந்த ஆக்கபூர்வமான கட்டுரையில், மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் வளர்ந்த பாரதம் – ஜி ராம் ஜி  சட்டம், 2025, வருமான ஆதரவு, சொத்து உருவாக்கம், விவசாய நிலைத்தன்மை மற்றும் நீண்ட கால கிராமப்புற உற்பத்தித்திறன் ஆகியவற்றை ஒரு சமரசமாக அல்லாமல், ஒரு தொடர்ச்சியாகக் கருதுகிறது என்பதை விளக்குகிறார்.

இந்த மசோதாவிற்கு முன்பு மாநில அரசுகளுடன் விரிவான ஆலோசனைகள், தொழில்நுட்பப் பயிலரங்குகள் மற்றும் பல தரப்பினருடனான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன என்பதை அவர் குறிப்பிடுகிறார். “

—-

TV/PKV/SE